பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளியில் உயிர்கள் 9% இந்த ஆராய்ச்சிகள் யாவும் பிரணிகள் உயிருடன் இருப்பதற்கு வேண்டிய சூழ்நிலைகளைக்கொண்ட காற்று புகாத பெட்டிகளை அமைக்கும சிக்கல்கள் தீர்ந்துவிட்டதை நமக்குப் புலப்படுத்துகின்றன. ஸ்பூத்ணிக்-2இல் 100 மணிநேர எடையின் மைக் குப் பிறகும் நாய் உயிரோ டிருந்ததே முக்கியமான நிகழ்ச்சியாகும். 100 மணிநேர -ேஇல்லாமைக்குப் பிறகும் இலக்கா உயிரோடிருந்ததால், எடையின்மை உயிர்களைக் கொல்லாது, ஆகவே மனிதனும் பாதுகாப்பாகச் சுற்று வழிக்குப் போகலாம் என்பதே நாம் இதஞல் அறியும் உண்மையாகும். அடுத்து, இரஷ்யா பொம்மை மனிதனைக்கொண்ட ஸ்பூக்னிக் 4 என்ற துணைக்கோளை இயக்கியது. அதன் எடை 9988 இராத்தல்கள் (4,540 கிலோ கிராம்). இதில் காற் ஹடைக்கப் பெற்ற அறையொன்றில் பொம்மை மனிதனுடன் பிற்காலப் பயணத்திற்கு வேண்டிய எல்லாக் கருவித் தொகுதிகளும் அமைக்கப்பெற்றிருந்தன. அதன் வெப்ப நிலையும் குளிர் சாதனப் பெட்டியொன் ருல் ஒரே சீராக வைத்துக் காக்கப்பெற்றது. கருவிகள் இயங்கும் முறை களையும் துணைக்கோள் செல்லும் சுற்றுவழியையும் பூமிக்கு அறிவிப்பதற்கான வானெலி பரப்பிகள் துணைக்கோளில் பொருத்தப்பெற்றிருந்தன. கிட்டத்தட்ட வட்டச்சுற்று வழியில் இயங்கிவந்த ஸ்பூத்ணிக்கின் அண்மைத் தொலைவு 195 மைல் (312 கி. மீ.); சேய்மைத் தொலைவு 225 மைல் (360 கி.மீ.). அதிலுள்ள கருவிகள் யாவும் சரியாக இயங்கின தாக வானெலி பரப்பிகள் அறிவித்தன. அதனைப் பூமிக்கு மீட்பதற்கான வானொலிக் கட்டளைகள் பிறப்பிக்கப்பெற்றன. ஏதோ எதிர்பாராத வகையில் ஏற்பட்ட கோளாறின் காரண மாகப் பின் னியங்கு இராக்கெட்டுகள் தவருன திசையில் வாயுப் பீறலை வெளிவீசின. இதனுல் துணைக்கோளின் வேகம் குறைவு படுவதற்குப் பதிலாக அதிகரித்து, துணைக்கோளும் பூமியை விட்டுவிலகியதஞல் அதனை வளிமண்டலத்திற்குக் கொண்டுவர 1. 1960ஆம் ஆண்டு மே 15ஆம் காள். தொ. உ. செ.-?