பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தொலை உலகச் செலவு முடியாது போயிற்று ; அது விண்வெளிக்குச் சென்றுவிட்டது. அதே ஆண்டு அமெரிக்கர்கள் அனுப்பிய சிறிய டிஸ்கவரச்-13 என்ற துணைக்கோளைச் சுற்றுப் பாதையினின்றும் திரும்பப் பெற்றுப் புகழடைந்தனர். மேற்குறிப்பிட்ட அமெரிக்க நிகழ்ச்சி நடைபெற்ற ஒன்பது நாட்களுக்குப் பிறகு ஸ்பூத்ணிக்-5 என்ற துணைக் கோளை இரஷ்யர்கள் இயக்கினர். ஸ்ட்ரெல்கா (Streika), பிரெல்கா (Brelka) என்ற இரண்டு நாய்கள், நாற்பது சுண்டெலிகள், இரண்டு எலிகள், ஈக்கள், நுண்கிருமிகள் (Microbes) ஆகியவை இதனுள் வைக்கப் பெற்றிருந்தன. இத் துணைக்கோள் 320 கி. மீ. உயரத்தில் 100 நிமிடங்களுக்கு ஒரு முறை வீதம் பூமியைச் சுற்றி வந்தது. பிராணிகளின் நடத்தையைப் பூமியிலிருந்து கவனித்தற்கேற்றவாறு தொலைக் காட்சி அமைப்பு அதில் பொருத்தப் பெற்றிருந்தது. நாய் களுக்கு விண்வெளிச் செலவுக்குரிய தனி உடைகள் அணிவிக்கப் பெற்றிருந்தன. நாய்களுக்கு ஓராண்டுக்காலம் விண்வெளிச் செலவுக்குரிய பயிற்சி அளிக்கப்பெற்றன. எனினும், இராக்கெட்டு உயரம் கிளம்பியபொழுது அவை காதுகளை நிமிர்த்திக்கொண்டு வெருண்டுநோக்கின; பாய்வதற்கும் முயன்றன. ஈர்ப்புவிசை மிகுதி நாய்களை அதிகமாக அழுத்தியது. ஸ்பூத்ணிக் சுற்று வழியை அடைந்ததும், எடையின்மையினுல் நாய்கள் அறைக்குள் மிதந்தன. நாளொன்றுக்கு இரண்டு தடவைகள் தானியங்கு முறையில் நாய்கட்குப் பசைபோன்ற உணவு அளிக்கப்பெற்றது. கதிர்வீச்சின் விளைவுகளைக் கண்டறியவே எலிகளும் சுண்டெலிகளும் அறையில் வைக்கப்பெற்றன. கதிர்வீச்சுத் தாக்குதல் இருப்பின் சுண்டெலியின் கறுத்த தோலில் சாம்பல் நிறமான மயிர்கள் தோன்றும். ஸ்பூத்ணிக் 18 சுற்றுகள் சுற்றி வந்ததும் பூமியினின்றும் அனுப்பப்பெற்ற 2. 1960ஆம் ஆண்டு ஆகஃச்டு 10ஆம் நாள். 3. 1960ஆம் ஆண்டு ஆகஃச்டு 19ஆம் காள்.