பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளியில் உயிர்கள் go வானெலிக் கட்டளையால் பின்னியங்கு இராக்கெட்டுகள் இயங்கத் தொடங்கின. துணைக்கோளின் வேகம் குறைந்து அது பூமியை நோக்கி விரைந்தது. ஏறக்குறைய 8 கி. மீட்டர் உயரத்தில் பாரமானியால் இயக்கப்பெற்ற தானியங்கு கருவி வால் பிராணிகளைக்கொண்ட கலத்தை வெளியேறச் செய்து பாதுகாப்பான முறையில் அது பூமிக்குக் கொணரப்பெற்றது. பிராணிகள் யாவும் நல்லநிலையில் இருந்தன. சுண்டெலிகள் யாதொன்றும் நடவாததுபோல பிஸ்கோத்துகளைத் தின்னத் தொடங்கின. இந்தச் சாதனையால் மேற்குறிப்பிட்ட அமெரிக்கர்களின் புகழ் மங்கிவிட்டது. அடுத்து ஸ்பூத்ணிக்-8 இயக்கப்பெற்றது. இதில் செல்கள் (Pchaika), முஷ்க்கா (Mushka) என்ற இரண்டு நாய்கள் பாது காப்பான அறையில் வைத்து அனுப்பப்பெற்றன. நாய்களின் நடத்தையைப் பூமியிலிருந்தவண்ணம் கவனிப்பதற்கு வாஞெலித் தொடர்புகள் இருந்தன. நாய்களின் நாடித் துடிப்பு, குருதியோட்டம், மூச்சுவிடும் வேகம் ஆகிய செயல் களைத் தொலைநிகழ்ச்சி அறிகருவி பூமியிலுள்ள தள அலுவலகத் தில் கவனித்துக் கொண்டிருப்போருக்கு அறிவித்துக்கொண் டிருந்தது. ஆயினும், இந்தத் துணைக்கோளும் ஏதோ கோளாறின் காரணமாகப் பூமிக்கு மீட்கப்பெருமல் விண் வெளியிலேயே எரிந்துபோயிற்று. அடுத்தாற்போல் அனுப்பப்பெற்ற ஸ்பூத்ணிக்-8இல் கறுப்பன் என்ற நாய், ஆய்வுக்கான வெள்ளெலி (Guinese-pig), கண்டெலி ஆகியவை சென்றன. அதே ஆண்டு 16 நாட் களுக்குப் பிறகு இயக்கப்பெற்ற" ஸ்பூக்னிக்.9 என்ற துணைக் கோளில் ஸ்டார்லெட் என்ற நாயும் வேறு சில உயிரினங்களும் சென்றன. பிராணிகளின் உடல் நிலைகளைத் தொலைநிகழ்ச்சி அறிகருவி தரையிலிருப்போருக்கு அறிவித்துக்கொண்டே 4. 1960ஆம் ஆண்டு திசம்பர் 1ஆம் நாள். 5. 1961ஆம் ஆண்டு மார்ச்சு 9ஆம் காள். .ே 1961ஆம் ஆண்டு மார்ச்சு 25ஆம் நாள்.