பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. விண்வெளி அநுபவங்கள் விண்வெளிப் பயணத்தில் இராக்கெட்டுப் பொறி யமைப்புகள் சரியாக இராவிடில் பழுதடையாத பொறி யமைப்புகளை ஏற்ற வகையில் பொருத்திவிடலாம். தவிரவும், தொழில் நுணுக்க ஏற்பாடுகளையெல்லாம் திட்டமிட்டு முற்ற முடியக் கொண்டு செலுத்திவிடலாம். ஆயினும், விண்வெளிச் செலவில் முக்கியமாகக் கருதப்பெறவேண்டியவன் மனிதனே. மனிதனுடைய வாழ்க்கை பிறந்த நாள் தொட்டுப் பூமியின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. காற்றழுத்தம், தட்ப வெப்பநிலை முதலிய பூமியின் சூழ்நிலைக் கூறுகளுக் கேற்றவாறு அவனுடைய உடல் இயங்கிப் பழக்கப் பெற்றுள்ளது. மேலும், இந்தப் பூமண்டலத்திலேயே ஒரு பகுதியிலிருந்து பிறிதொரு பகுதிக்குப் போகும் சிலருக்கு இடம் ஒத்துக் கொள்வதில்லை ; தண்ணிர் ஒத்துக் கொள்வ தில்லை. வேறு பல கூறுகள் சரிப்பட்டு வருவதில்லை. இங்ங்ன மிருக்க அவன் பூமிக்கு மிகத் தொலை தூரத்தில், அகண்ட ஏகாந்தப் பெருவெளியில், புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு சமாளித்துக்கொள்ள முடியுமா? இதற்காக அவன் என்னென்ன பாதுகாப்புகளைத் தேடிக் கொள்ள வேண்டும்? அவன் செய்துகொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் யாவை என்பன போன்ற பிரச்சினைகள் எழுகின்றன. விண்வெளிப் பயணத்தில் மிகவும் பலவீனமான தொடர்பாக இருப்பவன் மனிதனே எனத் தெரிகின்றது. இதனை ஈண்டுக் காண்போம். மிகுதியான எடிை : பூமியிலிருந்து உயரக் கிளம்புகையில் ஆற்றல் வாய்ந்த நேர்வேக வளர்ச்சியின் (Acceleration) காரணமாகத் தங்கள் எடை பன்மடங்கு அதிகரித்துவிட்டது போன்ற உணர்ச்சி ஏற்படுவதை அறிவியலறிஞர்கள் நன்கு