பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 தொலை உலகச் செலவு செயல்களைப் பூமியிலிருந்த வண்ணம் மக்கள் கண்டுகளித்தனர். மூன்ருவது சுற்றின் இறுதியில் டிட்டோவ் உணவு அருந்தி ஓய்வு எடுத்துக் கொண்டார். அவர் உறங்கும்பொழுது வாஞெலித் தொடர்பு நிறுத்தி வைக்கப்பெற்றது. எனினும், அவரது இதயத் துடிப்பு, சுவாசிக்கும் வேகம், குருதி அழுத்தம் இவற்றைத் தொலே நிகழ்ச்சி அறிகருவி அறிவித்துக் கொண்டே இருந்தது. ஆறு சுற்றுகளுக்குப் பின்னர் எடையின்மையால் அவருக்குக் குமட்டல், நிதானக் குறைவு, மயக்கம், பசியின்மை ஆகியவை ஏற்பட்டன. பதினேழாவது சுற்றின் இறுதியில் வாஸ்டாக்-2 பூமியை வந்தடைந்தது. டிட்டோவ் புன்முறுவலுடன் நன்னிலையில் கூண்டைவிட்டுப் புறம்போத்தார். அமெரிக்க மெர்க்குடித் திட்டப்படி ஜான் கிளென் (lohn Glean) என்பவர் ஃபிரெண்ட் ஷிப்.? (Friend Ship-7) என்ற துணைக் கோளில் அனுப்பப் பெற்ருர், அட்லாஸ் (Atlas) என்ற மூன்றடுக்கு இராக்கெட்டு அவர் சென்ற செயற்கைத் துணைக்கோளை இயக்கியது. இராக்கெட்டின் உந்துவிசை 1,53,536 கி. கிராம் ; செயற்கைத் துனைக்கோளின் எடை கிட்டத்தட்ட இரண்டு டன் ஆகும். ஜான் கிளென் 5 நிமிடங் களில் சுற்றுவழியை அடைந்தார். எடையற்ற நிலை அவருக்கு விரும்பத் தகாத நிகழ்ச்சிகளை உண்டுபண்ணவில்லே. பூமியிலுள்ளவை அனைத்தையும் தெளிவாகவே கண்டார். ஆஃபிரிக்காவின்மீது பறந்து செல்லுங்கால் புயல் புழுதி' கிளம்புவதைக் கண்ணுற்ருர்; உணவு நேரம் நெருங்கியதும் பசை போன்ற உணவை அருந்தினர். மூன்று சுற்றுகள் முடிவுற்றதும் அவரே பின்னியங்கு இராக்கெட்டுகனே இயக்கிகுச். அவர் அமர்ந்திருந்த துணைக்கோள் மாகடலில் வந்திறங்கியது. மீட்புக் குழுவினர் அவரை மீட்டனர். அவச் விண்வெளியில் பறந்தபொழுது பூமியுடன் வாஞெலித் தொடர்பு கொண்டிருந்தார். - - 爱。 1982ஆம் ஆண்டு பிப்பிரவரி 20ஆம் கான்,