பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்போலோ திட்டம் 129 லிருப்பதால் இரண்டன் கவர்ச்சி விசைகளும் 81 : 1. என்ற வி கி த த் தி ல் த ன் இருக்கும். அஃதாவது, இரண்டன் கவர்ச்சிகளும் அவற்றின் தொலைவுகள் 181: 1 என்ற விகிதத்திலிருக்கும்பொழுது சமமாகும். இன்னும் விளக்கினல் பூமி தன் மையத்திலிருந்து x2,40,000=2,16,000மைல் 3,84,000 கி.மீ. தொலைவிலிருக் கும்பொழுதும், திங்கள் தன்மையத்திலிருந்து .x21,000 24,000 (சுமார்) மைல் 38,400 கி. மீ) தொலைவிலிருக்கும் பொழுதும் அவற்றின் கவர்ச்சி விசை சமமாக இருக்கும். இதுவே படத்தில் நடுநிலைக்கோட்டின் உச்சி (Neutral summit, எனக் காட்டப் பெற்துள்ளது. இத்தகைய நிலையிலுள்ள புள்ளிகள் எண்ணற்றவை. இவை யாவும் ஒன்று சேர்ந்து ஒரு மேற்பரப்பினை உண்டாக்கும். இஃது ஒரு விந்தையான iேque) எல்லையாகும். இந்த எல்லேயின் ஒரு புறம் சென்ருல் செல்லும் பொருள் பூமியை நோக்கி இழுக்கப்பெறும் : மறுபுறம் சென்ருல் திங்களே நோக்கி இழுக்கப்பெறும், கற்பனைக் கதைகளில் திங்களைநோக்கி ஏணிமூலம் மனிதன் செய்யும் பயணத்தைப் படம் (19) விளக்குகின்றது. நடுதிலேவி லிருக்கும்பொழுது ஏணியின்றியே அவன் தங்கி ஓய்வு கொள்ளலாம்.* விண்கலம் திங்களே நோக்கிச் செல்வதை ஒருவர் ஒர் உயர்ந்த செங்குத்தான மலையிலேறி மறுபுறம் சிறிது தூரம் இறங்குவதளுேடு ஒப்பிடலாம். இராக்கெட்டுகள் கலத்திற்கு மணிக்கு 40,000 கி. மீ. வீதம் நேர் வேகத்தை (Velocity) அளிக்கக் கூடுமாயின் அது மலையுச்சியை அடையும் 4. இப் பகுதியைப் புராணங்கள் கூறும் திரிசங்கு சுவர்க்கம் என்று விளக்கி வைக்கலாம். பூமி, திங்கன் இவற்றின் இடமாத்தக் களுக்கேற்ப இந்த இடமும் மாறிக்கொண்டே இருக்கும். தொ. உ. செ.-8