பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#36 - தொலே உலகச் செலவு அப்போலோ-2 பயணம் வெற்றி கண்டது. அப்போலோ-3 பயணம் கட்டளைப் பகுதி (Command module) பணிப் பகுதி |Service module) இவற்றின் துணை அமைப்புகளிலும் விண்வெளிக் கலத்தின் ஏற்புடைமையிலும், அமைப்பின் உருக்குலையா நிலையிலும் சோதனைகளை மேற்கொள்ளல், அதிக வெப்பத்துடன் கலம் திரும்பி வருங்கால் அது சரியாக இருக்குமா என்பதைச் சோதித்தல் என்பவற்றை நோக்கங் கனாகக் கொண்டது ; அது வெற்றியுடனும் நிறைவேறியது. அப்போலோ-ல் பயணத்தில் சட்டர்ன்-5 என்ற மாபெரும் இராக்கெட்டு பயன்படுத்தப்பெற்றது. இதிலும் அம்புலிப் பயணத்திற்கு முன்னர்ச் சோதிக்க வேண்டிய பல்வேறு அமைப்புகள் மீண்டும் சோதித்துச் சரி பார்க்கப் பெற்றன. அப்போலோ.5 பயணத்தில் அம்புலி ஊர்தியில் (Lunar module) பல சோதனைகளை மேற்கொண்டு வெற்றி கண்டனர். அப்போலோ-6 பயணத்தில் கட்டளைப் பகுதியும் பனிப் பகுதியும் கொண்ட இணைப்பு 120 கி. மீட்டர் உயரத்தினின்றும் அம்புலியினின்றும் திரும்புங்கால் எந்த வேகத்தில் வருமோ அதே வேகத்தில் காற்று மண்டலத்தில் துழைந்தது. தவிர, அந்த விண்வெளிக்கலம் ஏற்கெனவே குறிப்பிடப் பெற்றிருந்த இட இலக்கினின்றும் எண்பது கிலோ மீட்டர் தொலைவில் இறங்கியது. 1969இல் மேற்கொண்ட அம்புலிப் பயணத்தின் வெற்றிக்கு அறிகுறியாக இப் பயணம் அமைந்ததைக் கண்டு அறிஞர் உலகம் பெருமிதம் கொண்டது. அப்போலோ-? பயணம் இத் திட்டத்தின்கீழ் முதன் முதலாக மேற்கொள்ளப்பெற்ற ஆளுள்ள பயன்னமாகும். மூன்று விண்வெளி வீரர்களைக்கொண்ட இப் பயணம் கிட்டத்தட்டப் பதிகுெரு நாட்கள் நீடித்தது. இப்பயணத்தில் விண்வெளி வீரர்கள் சென்று வந்த தொலைவு எழுபத்திரண்டு சன் கி. மீட்டர்களாகும். திரும்பிய விண்வெளிக்கலமும் அடிக் மாகடலில் ஏற்கெனவே குறிப்பிடப் பெற்றிருந்த க்கில் சரியாக வந்திறங்கியது. இப் பயணத்தில் தன்மு. விண்வெளியினின்றும் அவ்வப்பொழுது கண்ட காட்சிகள் தெர்லேக்காட்சிப் படங்களாக அனுப்பப்பெற்றன.