பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. அம்புலிப் பயணம் விண்வெளிக் கலத்தின்மூலம் மனிதன் அம்புலியை அடைவதற்குமுன்னர்ப் பல படிகளில் சோதனைகளை மேற் கொள்ளல்வேண்டும், முதலில் ஆளில்லாத கலங்களைக் கொண்டும், அதன்பிறகு ஆளுள்ள விண்கலங்களைக்கொண்டும் இச் சோதனைகள் செய்யப் பெறுதல்வேண்டும். அப்போலோ: முதல் அப்போலோ.10 பயணங்கள் வரை இச் சோதனைகள் மேற்கொள்ளப்பெற்றன. அப்போலோ-11. பயணத்தில் மனிதன் அம்புலியை அடைத்துவிட்டான். இந்த விவரங் களைச் சுருக்கமாக ஈண்டுக் காண்போம்." அப்போலோ.1 முதல் 7 வரை : இவற்றுள் அப்போலோ-1 முதல் அப்போலோ 6 வரை ஆளில்லாத பயணங்கள் ; அப்போலோ- மூன்று விண்வெளி வீரர்கனேக்கொண்ட ஆளுள்ள முதற் பயணமாகும், அப்போலோ-1 பயணத்தில் விண்வெளிச் சூழ்நிலையில் கலத்தின் பல்வேறு அமைப்புகள் சரிவர இயங்குகின்றனவா ? விண்வெளிக் கலத்தின் கவசம் அதிக வெப்பத்தைத் தாங்குகின்றதா ? அந்த வெப்பத்துடன் கலத்தை எங்ஙனம் மீட்பது ? என்ற விவரங்களேச் சோதித்து வெற்றி கண்டனர். பூமியின் இழுவிசை பூச்சியமாக இருக்கும் பொழுது கலத்தின் கருவித் தொகுதியிலிருந்து சேமித்த நிலையிலிருக்கும் திரவ நீரியத்தையும் (Hydrogen) திரவ உயிரியத்தையும் (Oxygen) தனியர்கப் பிரிக்க முடியுமா? கலத்தின் இயக்கம் நின்றுபோளுல் அதனைத் திரும்பவும் இயங்கச் செய்ய முடியுமா? ஆகிய செயல்களைச் சோதித்து 1. விரிவான முறையில் இவ்வாசிரியரின் அம்புப் பயணம்' (கழக வெளியீடு) என்ற நூலில் காணலாம்.