பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笼器盛 தொல் உலகச் செலவு விகிதம் அதிகரிக்கும். பொருண்மை விகிதத்தை 7-க்குமேல் அதிகப்படுத்த முடியாது என்பதை ஏற்கெனவே அறிந்து கோன்டுன்னோம், தமது அன்ருட வாழ்வில் குறுக்கிடும் நிலையொன்றினைக் கொண்டு மேற்குறிப்பிட்ட திஅயை விளக்கலாம். நாம் வடக்கே மன்னும் இமயமலை'யின் அடிவாரத்திலிருந்து "தித்தம் தவம்புரி குமரி எல்லேக்கு மோட்டசர்க் காரில் பயணம் செய்வதாகக் கொள்வோம். இவ்வளவு தெடுத்தொலைவிற்கும் தேவைப்படும் பெட்ரோலேக் கொள்ளக் கூடிய கொள்கலன் எந்தக் காரிலும் இருக்க முடியாது. ஆகவே, நாம் என்ன செய்கின்ளுேம் ? வழியில் பல இடங்களில் அமைக்கப் பெற்றிருக்கும் பல பெட்ரோல் நிலையங்களில் தமக்குத் தேவைப்படும் பெட்ரோலேப் பெறுகின்குேம். இங்கனமே அம்புவியை நோக்கிப் பயணம் செய்யும் விண்கலமும் ஒருவித அண்டவெளிப் பெட்ரோல் நிலையத்தில் தனக்குத் தேலையான எரிபொருணேப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றது, இரஷ்யர்களும் அமெரிக்கர்களும் இதனைச் சமாளிக்க வேறுபட்ட இரண்டு திட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். எரிபொருள்களைச் சேமித்து வைக்கக்கூடிய விண்வெளி திம்ே Space station) ஒன்றைப் பூமியைச் சுற்றி அன்ன ஏதோ ஒரு சுற்றுவழியில் அமைப்பதில் இரஷ்யர்கள் முயன்று வருகின்றனர். அமெரிக்கர்கள் முதலில் சந்திரனைக் கற்றவும் (அப்போலோ-8 வட்டமிட்டதுபோல்) அதன்பிறகு அம்புலித் தரையில் ஒரு சிறிய விண்வெளிக் கலத்தின் மூலம் இறங்க வேண்டும் எனவும் திட்டமிட்டனர். அப்போலோ திட்டத்தில் திங்களே மனிதன் அடைந்த பல்வேறு விவரங்களை அடுத்த இயலில் காண்போம்.