பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138. தொலே உலகச் செலவு இதுகாறும் மேற்கொள்ளப்பெற்ற ஏழு பயணங்களும் பூமியின் கற்றுவழியிலேதான் நடைபெற்றன. அப்போலோ -8 பயணம் : அம்புலிக்கு மனிதனை அனுப்பு வதற்கு முன்னர் மனிதனே நேரடியாக விண்வெளிக்குச் சென்று திங்கள் மண்டலத்தை நெருங்கிச் சில அடிப்படை அான தகவல்களே அறிந்து கொள்ளவேண்டும். இப் பயனத்தில் மூன்று விண்வெளி வீரர்கள் சந்திரனுக்கு எழுபது மைல் வரை (112 கி.மீ.) அருகில் சென்று சந்திரனின் மேற்பரப்பைப் பல படங்கள் எடுத்தனர். எதிர் காலத்தில் மனிதன் அம்புலியில் இறங்கும் பயணத்தில் எத்தகைய இராக்கெட்டு பயன்படுத்தப் பெறுமோ அத்தகைய இராக்கெட்டே இப் பயணத்தில் பயன்படுத்தப் பெற்றது. அங்கனமே எந்த மாதிரியான விண்வெளிக்கலம் அப் பயணத்தில் பயன்படுத்தப் பெறுமோ அத்தகைய கலமே இப் பயணத்திலும் மேற்கொள்ளப் பெற்றது. ஆளுல், அம்புலி ஊர்தி (Luna Iodule) என்ற ஒரு பகுதி மட்டிலும் இதில் பொருத்தப் பெறவில்லை. இந்த அம்புலி ஊர்திதான் அம்புலியைச் சுற்றிவரும் மனிதனை அம்புவிக்குக்கொண்டு செல்லும். அப்போலோ வீரர்கள் பத்துத் தடவை அம்புலியைச் சுற்றினர். அப்போது திங்களைப் பலமுறை படங்கள் எடுத்தனர் ; வேறு தகவல்களையும் திரட்டினர். இப் பயணத் திற்கு ஆன மொத்த நேரம் 147 மணி ஆகும். - அப்போலேத.9 பயணம் : ஐம்பது டன் எடையுள்ள அப்போலோ.கி விண்கலம் முழுவதையும் முதல் தடவையாக விண்வெளியில் சோதிப்பதே இப் பயணத்தின் நோக்கமாகும். தாய்க் கலத்திலிருந்து திங்களில் இறங்கும் அம்புலி ஊர்தி’ யாகிய சேய்க்கலத்தைத் தனியே பிரித்துச் சென்று மீண்டும் 2. இக்க 21.12.08இல் தொடங்கியது. 8. இது 8-8-1989இல் தொடங்கியது.