பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளி நிலையங்கள் 453 வேகத்தில் பூமியைச் சுற்றிக்கொண்டே வரும். இந்த இரண்டு பகுதிகளேயும் ஒன்றையொன்று தொடுமாறும் நெருங்கி வருமாறும் செய்து இனத்துவிடுவர். வேகமாக இயங்கிக் கொண்டுள்ள பகுதிகளே நாம் தினைக்கின்றவாறு எங்ங்ணம் நெருங்கி வரச் செய்ய இயலும் என்று வினவலாம். கணக்கீடு சரியாக இருப்பின் முடியாதது ஒன்றும் இல்லே, கணிதம்தான் அறிவியலின் உயிர் நாடி. ஏன் ? இயற்கையின் உயிர் நாடியும் அதுதான். நமது பூமி மணிக்கு 1,05,600 கிலோ மீட்டர் வேகத்தில் (விகுடிக்கு 29:33 கி.மீ, வேகம்) பகலவனச் சுற்றி வந்து கொண்டுள்ளது. அப்படி இருத்தும் அதில் வதியும் நாம் அதன் இயக்கத்திை உணர்வதில்லையல்லவா ? அங்ங்னமே சுற்றுவழியில் இயங்கும் பகுதிகளில் இருப்பவர்களும் இயக்கத்தை உணர்வதில்லை. எவ்வளவு பெரிய பகுதிகளாக இருந்தாலும் அவற்றிற்கு எடை என்பது இல்லேயாதலின் அவை செல்லும் திசையையும் எளிதாக மாற்றித் திருப்பிவிடலாம். இதனை நிறைவேற்று வதற்காகவே திட எரிபொருள்களைக்கொண்ட பல்வேலு சிறு இராக்கெட்டுகள் பல்வேறு திசைகளே நோக்கியவாறு அப் பகுதிகளில் பொருத்தப்பெற்றிருக்கும். விண்வெளி வீரர்கள் இச் சிறு இராக்கெட்டுகளே இயக்கி அப் பகுதிகளே மேலும், கீழும், பக்கவாட்டிலும் செல்லுமாறு இயக்க முடியும். இம் முறையில் இரண்டு பகுதிகனேயும் நெருங்கி வரச் செய்து அவற்றை இறுகப் பிணைத்துவிடுவார்கள். மணிக்கு 25,600 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கிக் கொண்டுள்ள இரண்டு பகுதிகளும் நெருங்கி வருங்கால் ஒன்ருேடொன்று மோதிப் பெருஞ் சேதம் ஏற்படுமல்லவா என வினவலாம். வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் தானியங்கி (Automobile) ஒரு சுவரிலோ அல்லது மரத்திலோ மோதினுல் சேதம் உண்டாகும் என்பதை நாம் அறிவோம். அதே ஊர்தி எதிரில் வேகமாக வந்து கொண்டிருக்கும் வேகுேரு ஊர்தியுடன் மோதினுல் இன்னும் இச் சேதம் அதிகமாகும் இன்பதும் நமக்குத் தெரியும். சென்னே, பம்பாய், கல்கத்தா