பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளி நிலையங்கள் 盘密器、 நிலையத்தின் உறுப்புகளை நகர்த்தவும் இந்த இராக்கெட்டு மோட்டார்கள் பயன்படுகின்றன. விண்வெளி நிலயத்துடன் தாம் நீண்ட கயிறுகளிளுல் பிணைக்கப்பெற்றிருப்பர். ஒவ்வொருவரும் தமக்குத் தாமே கயிறுகளிளுல் பிணைத்துக் கொண்டுமிருப்பர். விண்வெளியில் வெற்றிடமே (Vacuum) இருப் பதால் ஒருவர் பேசுவதை மற்ருெருவர் கேட்க முடியாது. ஏனெனில், ஒலியைக் கொண்டு செல்லும் காற்று ஊடகம் (Medium) அங்கு இல்லே. ஆதலால் அவர்கள் வாக்கி-டாக்கி" (Walkie Takis) என்னும் சாதனங்களை வைத்துக்கொண்டு. ஒருவரோடொருவர் உரையாடிக் கொள்வர். இவையெல்லாம் தமக்கு வியப்பாகத் தோன்றலாம். எனினும், அறிவியலின் அதிசயச் செயல்களேச் சாதாரண மக்களாகிய நாம் எங்கனம் புரித்துகொள்ள முடியும் ? - விண்வெளி நிலையத்தை அமைக்கும்பொழுது எடை யின்மையால் ஏற்படும் சில தொல்லைகனே ச் சமாளிப்பதை மேலே கண்டோம் நிலேயத்தை அமைத்த பிறகும் பல நிபுணர்கள் தொடர்ந்து நிலையத்தினுள் இருந்துவருவர். அவர்கள் எடையின்மையால் சதது. தொல்ஃப்.ட்டுக் கொண்டிருக்க நேரிடுமல்லவா ? இந்நிலையைச் சமாளிப்பதற்கு. வான்பிரான் என்பார் ஓர் அமைப்பை ஏற்படுத்துவதற்கு ஒரு. யோசனை கூறியுள்ளார். விண்வெளிக் கூண்டு பூமியைச் கற்றி ஓடிக் கொண்டிருக்கும்பொழுது அதனைத் தன் அச்சில் சுழலுமாறு அமைத்துவிட்டால், அதஞல் உண்டாகும் மைய விலகு விசையால் (Centrifugai force) கூண்டினுள் உன்ன பொருள்கன் கூண்டின் வெளி விளிம்புடன் அழுத்தப்பேத்து அப் போருள்கட்கு எடை ஏற்படும். இதில் மைய விலகு. விசை ஈர்ப்புவிசையின் செயலே மேற்கொள்ளுகின்றது. இதற்குக் கூண்டு 22 விகுடிகட்கு ஒருமுறை கழன் குல் போது மானது. இதனுல் கூண்டினுள் இருப்போர் எடையின்மை உணர்ச்சியைச் சிறிதும் உணர்வதே இல்லே. ஆயின், இதிலும் ஒரு விபரீதம் ஏற்படுகின்றது. கூண்டின் அடிப் பாகத்தில் நேராக திற்கலாம். அதற்கு எதிர்ப்புறத்தில் தலைகீழாக நிற்பதுதான் அந்த இடத்திற்கு தேராக இருக்கும்.