பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளி நிலையங்கள் 註爵賞 கவனத்தையும் கருத்தையும் செலுத்துவதாகத் தோன்று கின்றது. ஒரே சுற்றுவழியில் இயங்குமாறு பகுதி பகுதியாக ஒரே சுற்றுவழிக்கு அனுப்பி அதன்பிறகு அவற்றை ஒன்ருக இணையுமாறு செய்து நிலையமாக்குவது இவர்கள் மேற் கொண்டுள்ள முயற்சியாகும். சோயுஸ் - 5. சோயுஸ் 6 இணையுமாறு செய்த சோதனைகள் இந் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். இஃது ஒர் அண்ட வெளி பெட்ரோல் நிலையம்போல் செயற்படுவதுடன் வானநூல் உற்று நோக்கல்களிலும் அறிவியல் சோதனைகளிலும் பெரும் பங்கு கொள்ளும். நிலையத்தின் பயன்கள்: விண்வெளி நிலையங்கள் பல விதங்களில் பயன்படுகின்றன : முதலாவது: அவை இராக்கெட்டுத் தளங்களாக விளங்கும். இவற்றிலிருந்து சிறிய இராக்கெட்டுகளைக் கொண்டு மதி மண்டலத்திற்கும் ஏனைய கோள்கட்கும் போய் வரலாம். இந் நிலையத்திலிருந்து அவ்விடங்கட்குப் புறப்பட்டுச் செல்வது எளிது. விண்வெளிக் கலங்களுக்கு இங்கிருந்து எரிபொருள் வசதிகளைப் பெற்றுப் பூமியின் ஈர்ப்புவிசையிஞல் ஏற்படும் இடையூறுகளின்றிக் கிளம்பி மேலே செல்லலாம். இரண்டாவது : வானிலை ஆராய்ச்சிக்கு. இந் நிலையங்கள் பெரிதும் பயன்படக்கூடியவை. இந் நிலையங்களிலிருந்து கொண்டு பூமியின் மீது படரும் முகில் கூட்டங்களையும், அவை திரண்டு உருப் பெறுவதையும் கவனித்துக் காலநிலைபற்றி தன்கு தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. இப்போதைய நிலையில் குறுகிய கால வானிலை அறிவிப்டிே சாத்தியப்படுகிறது. ஆனல், இந் நிலையங்களிலிருந்து கொண்டு பூமியின் பரப்பைச் சூழ்ந்துள்ள நிலையைக் கவனித்து நீண்டகால வானில் அறிவிப்பைத் தெரிவித்தல் இயலும், புயல் உருவாகும் பகுதிகளைத் தெரிந்து கொண்டு உடனுக் குடன் எச்சரிக்கவும் முடியும், - - . . ... : தொ. உ. செ.-11 .