பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளி நிலையங்கள் 置器器 ஆராய்ச்சிப் பிரிவுகளை அமைத்து உயிர்ப் பிராணிகளே விண்வெளிச் சுற்றுப்புறம் எங்ங்ணம் பாதிக்கக் கூடும் என்பதையும், உயிரணுப் பிரிவுகள், அவற்றின் வளர்ச்சி, அண்டக் கதிர்கள் உயிரினங்களைப் பாதிக்கும் முறைகள் போன்ற ஆய்வு முடிவுகளையும் தெரிந்து கொள்ள முடிகின்றது. இதய நோயாளர்க்குச் சிகிச்சை அளிப்பதற்கு இவை சிறந்த இடங்களாகக் கருதப் பெறுகின்றன. . ஆருவது : கடலில் செல்லும் மாலுமிகளும், விமானங் களில் செல்லும் விமானிகளும் இந் நிலையங்களின் தோற்றத்தை நன்கு தெரிந்துகொண்டு தாங்கள் செல்ல வேண்டிய திசைகளை அறுதியிட்டுக்கொள்ள முடிகின்றது. ஏழாவது : புதிய தனிமங்களின் இருப்பினைக் காண்பதற் கேற்ற ஆய்வகத்தை அமைப்பதற்கு வழி அமைக்கின்றன இந் நிலையங்கள். உயிரியம் இல்லாதிகல விண்வெளி வேதியியல் (Space chanistry) வர்ைவதற்கு இந்த ஆய்வகம் பேருதவியாக இருக்கும். எட்டிாவது : இந்நிலையங்கள் இரண்டு மணிக்கொரு முறை பூமியைச் சுற்றி வருவதால் பூமியின் பரப்பில் எப் பகுதிகளில் போர்ப் படைகள், கப்பற் படைகள், விமானப் படைகள் அணிவகுத்தாலும் இவற்றிலிருந்து விரைவில் தெரிந்துகொள்ள முடியும். பூமியிலிருந்து குண்டுகணை வீசி இந் நிலையங்களே அழித்துவிட முடியாது. ஆளுல், இத் நிலையங்களிலுள்ளவர்கள் விழிப்புடன் இருந்து வெகுவிரைவில் பதில் நடவடிக்கைகனை மேற்கொள்வது எளிதாக இருக்கும். எனவே, ஐ. நா. சபை இந் நிலையங்களில் இடம் பெற்துத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து உலகில் எப் பகுதியிலும் போரினைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கை எடுத்து உலக சமாதானநிலைக்கு வழி கோலி அரசியல் அரங்கில் சிறந்த பணிபுரியலாம். இன்னும் சில ஆண்டுகளில் இந்த விண்வெளி நிலையங்கள், பேருந்து நிலையங்கள். புகைவண் டி நிலையங்கள்,