பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. பயணத்தின் பயன் சென்ற இயலின் இறுதியில் விண்வெளி நிலையங்களின் பயன்களைக் குறிப்பிடு முகத்தான் ஒரு சில பயன்கள் காட்டப் பெற்றன. மேலும் சிலவற்றை ஈண்டுக் காண்போம். இன்று செல்வங் கொழிக்கும் இரஷ்யா, அமெரிக்கா என்ற இரு நாடுகளும் தொலைவுலகச் செலவில் செலவிடும் தொகை கணக்கற்றது. டெல்ஸ்டார் என்னும் ஒரு துணைக் கோளை அமைத்து அதனே இயக்க ஒரு கோடி ரூபாய் செலவாகிறதாகக் கூறுகின்றனர். மனிதனைத் திங்களுக்கு அனுப்புவதற்கு முன்னர்க் குறைந்தது நூறு விண்கலங்கனே யாவது ஆய்வு முறையாகத் திங்களுக்கு அனுப்பி வெற்தி கண்டாக வேண்டும். பிற கோள்களின் பயணங்களிலும் இதே முறைதான் மேற்கொள்ளப் பெறுதல் வேண்டும். இவற்றிற்கெல்லாம் விரயம் ஆகும் தொகை எவ்வளவு? வலுவான இராக்கெட்டுகளே அமைக்கும் இரஷ்யத் திறனும் நுண்கருவிகளை அமைக்கும் அமெரிக்கத் திறனும் ஒன்று சேர்ந்தால் எவ்வளவோ சேயல்களை எளிதாகச் சாதித்து வீளுன் செலவினையும் குறைக்கலாமல்லவா? 1987ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இத் துறையில் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பெற்ற ஒப்பந் தத்தில் திங்களும் பிற கோள்களும் அடங்கிய புறவெளியை ஆராய்வதற்காகவும் பயன்படுத்திக் கொள்வதற்காகவும் அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகட்கு அடிப்படையான கோட்பாடுகள் விளக்கமாகக் கூறப்பெற்றுள்ளன. அண்மையில் அப்போலோ விண்கலத்தில் திங்களைச்சுற்றி வலம் வந்தது அறிவியல்நுட்பச் சாதனையாயினும் இன்றைய உலக மக்களின் தேவையை மறந்து அந்த இடத்தில் விண்