பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு செவ்வாய்க் கோளில் ஆய்வுகள் அண்மைக் காலமாகச் செவ்வாய்க் கோளைப் பற்றிய ஆராய்ச்சி நடைபெற்ற வண்ணம் உள்ளது என்பதை நாம் அறிவோம். இந்த நில உலகைத் தவிர பிற கோள்களில் ஏதாவது உயிரினம் உண்டா என்பதைக் கண்டறிய மனிதன் மேற்கொண்டுள்ள மாபெரும் முயற்சிதான் அமெரிக்க அரசு தீட்டியுள்ள வைக்கிங் திட்டம். இத்த மாபெருந் திட்டத்திற்கு. ரூ. 800 கோடி செலவு ஆயிற்று. வைக்கிங் கலத்தைக் கட்டி முடிக்க 8 ஆண்டுகள் ஆயின. பத்தாயிரம் திபுணர்கள் இரவு' பகலாக இந்த வேலையில் ஈடுபட்டனர். இந்தக் கலத்தின் மொத்த எடை 3545.4 கிலோ கிராம். இதில் 15 இலட்சம். துட்பமான உறுப்புகள் அடங்கியுள்ளன. பூமியிலிருந்து கிட்டத்தட்ட 1080 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செவ்வாய்க் கோள். அது பூமியைப் போலவேதான் உள்ளது. ஆளுல், பூமியைவிட 20 கோடி ஆண்டுகள் மூத்தது. பேரிக்காய் போன்ற வடிவம்: கொண்டது. அங்கு எரிமலைகள் உள்ளன ; பள்ளத்தாக்குகள் இருக்கின்றன. ஆற்றுப்படுகைகள் காணப்பெறுகின்றன. ஆளுல், மேற்பரப்பில் தண்ணீர் இல்லை. அது அடிப்பரப்பில் உறைந்து காணப்படுகின்றது. செவ்வாய்த்தரை திண்ணிய தாக இல்லாததால் நீர் மேலே தங்காது தரைக்குக் கீழே. சென்று விடுகின்றது. ---------...--