பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவ்வாய்க் கோளில் ஆய்வுகள் 試7恋 செவ்வாய்க் கோளுக்கு போபோஸ்', 'டிெமாஸ் என்ற இரண்டு துணைகோள்கள் உள்ளன. செவ்வாய்க் கேrளே இலக்கிங் விண்கலம் வட்டமிட்டுக்கொண்டிருப்பதையும் படத்தில் காணலாம், 1975 ஆகஃச்டு 20ஆம் நாள் வைக்கிங் . i என்ற விண்கலம் செவ்வாயை நோக்கிச் செலுத்தப் பெற்றது. அஃது 1976 சூலை 3ஆம் நாள் செவ்வாயில் இறங்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்பெற்றது. ஆளுல், அஃது இறங்கக் கூடிய திட்டமிட்ட இடம் பாறைப் பாங்கான இடம் என்று பின்னர்த் தெரிந்ததால் அஃது இறங்குவதை நிறுத்தி வைத்தனர் திபுணர்கள். சூலை 20ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதனே இறங்குமாறு செய்தனர். ஆகவே, இந்த நாள் மனித வரலாற்றில் மறக்க முடியாத தாளாயிற்று. வைக்கிங் செவ்வாய்க் கோளில் செவ்வாய்க் கிழமையன்று இறங்கு வதற்கென்றே இத் தடங்கல் நேரிட்டது போலும் ! வைக்கிங்-1 செவ்வாய்க் கோளே வலம் வந்த ஐந்தாவது செயற்கைத் துணைக்கோளாகும். முதன்முதலாக அமெரிக்கா அனுப்பிய மாரினர்.9 என்ற செயற்கைத் துணைக்கோள் வட்டமிட்டது. அதனை அடுத்து இரஷ்யா அனுப்பிய மூன்று செயற்கைத் துணைக்கோள்கள் வட்டமிட்டன. இப்போது செவ்வாயை வட்டமிடும் வைக்கிங்-1 ஐந்தாவது செயற்கைத் துணைக்கோளாகும். அடுத்து வட்டமிடப் போகும் வைக்கிங்..? ஆருவது செயற்கைத் துணைக்கோளாக அமையும். பினாரிடாவிலிருந்து 1080 இலட்சம் கி. மீட்டர் தொல்வி லுள்ள செவ்வாய்க் கோளை அடைய வைக்கிங்-1, பத்து மின்தம் 20 நாள்கள் பயணம் செய்ய வேண்டியதாயிற்று. அம்புவியில் இறங்குவதற்கு மேற்கொண்ட அப்போலோ விண்கலத்தை விடவும் தம் பூமியைச் சுற்றி வரும் விண்வெளிப் படகினே (Skylab) விடவும் யு. எஸ். வைக்கிங் கலங்கள் மிகவும் சிக்கலானவை. வைக்கிங் கலம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று செவ்வாயைச் சுற்றி வலம் வரும் 'ஆர்பிட்டிச் (Orbiter) என்பது ; மற்ருென்று செவ்வாய்த் தரையில் இறங்கும் லாண்டர் (Lander) என்பது.