பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவ்வாய்க் கோளின் ஆய்வுகள் 177 சோதிக்கும். அதற்குப் பிரத்தியேகமாக ஒரு கருவி உள்ளது. மண்ணில் கதிரியக்கப் பொருள் ஏதாவது உள்ளதா என்பதை ஆராய மற்ருெரு கருவி உள்ளது. செவ்வாயின் மேற்பரப்புக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தை ஆராயப் பிறிதொரு கருவி உள்ளது. உயிரியல் ஆய்வகத்தில் அளவு முழுவதும் கருவிகள் நிறைந்துள்ளன. அனைத்தும் தானியங்கிக் கருவிகளாகும் மிக நுண்ணியதாகச் செயற்படு பவை. இவ் வாய்வகத்தில் 40,000 கின்கருவிகள், 23,000 டிரான்ஸிஸ்டர்கள், 42 சின்னஞ்சிறு வால்வுகள், 88 கம்பி இணைப்பு வெப்பமூட்டும் கருவிகள் செயற்படுகின்றன. இவற்றைத் தவிரக் கதிரியக்க ஐஸ்டோப் விசை தரும் கருவி, வெயில் விசை உண்டுபண்ணும் லிமுலேட்டர் கருவிகள், வாயு அளவிடும் கருவி மின்விசை தகவல் போக்குவரத்துச் சூழ்நிலைக் கருவிகள், நீர்விசை காற்று அழுத்த அமைப்புகள் முதலியவையும் அங்கு உள்ளன. இவை அனைத்தும் ஒரு கன அடி அளவுள்ள இடத்தினுள் அடங்கியுள்ளன. லாண்டர் வெற்றிகரமாகச் செவ்வாயில் இறங்கி ஒரு வாசம் கழித்து மூன்று மீட்டர் நீளமுள்ள ஒரு செயற்கை உறுப்பு வெளியே வரும், லாண்டரிலிருக்கும் காமிராக்களின் கண்கள் கண்காணித்த வண்ணம் இருக்கையில் மண்வெட்டி போன்றிருக்கும் அந்த உறுப்பு ஒரு கையளவு மண்ணைத் தோண்டி எடுக்கும் அது முப்பது இராத்தல் ஆற்றலில் தோண்டக் கூடியது. ஐந்து இராத்தல் ஆற்றலில் துரக்கக் கூடியது. தோண்டியெடுக்கப்பெற்ற மண் கலங்களில் போடப்படுதல் வேண்டும். யாது காரணத்தாலோ சூலை 23ஆம் தேதியன்று தானுக இயங்கக்கூடிய இந்த உறுப்பு திடிரென்று இயங்கவில்லை. இந்த உறுப்பினை 17 முறை இயங்கச் செய்து மண்ணைச் சேகரிப்பதற்கு அறிவிய லறிஞர்கள் முன்னதாகவே திட்டமிட்டிருந்தனர். இதனுல் வைக்கிங் கலத்திலிருந்து தாகுக வெளியே நீட்டிக்கொள்ளவும் பின்பு அப்படியே உள்ளே மடக்கிக்கொள்ளவும் முடியும். இதன் படி அறிவியலறிஞர்கள் இந்த உறுப்பிற்குக் கட்டன: சிறப்பித்தனர். அவர்கள் திட்டமிட்டவாறு 12 தோ. உ. செ.-43