பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவ்வாய்க் கோளின் ஆய்வுகள் 179 துலக்கிகளைக் (Radio active tracers) கொண்டு மேற்கொள்ளப் பெற்ற சோதனையொன்ருல் கரியமிலவாயுவும் வேறுவாயுக்களும் இருப்பதாக அறியப் பெற்றது. இதஞல் செவ்வாயின் தரையில் உயிரினச் செயல்கள் போன்ற பெளதிக அல்லது வேதியியற் செயல்கள் நடைபெற்றுக்கொண்டிருத்தல்வேண்டும் என்று கருதுகின்றனர் ஆய்வாளர்கள். செவ்வாய் மண்ணில் மேற்கொள்ளப்பெற்ற சோதனைகளின் விளைவால் அங்குள்ள வேதியியற் சேர்க்கைப் பொருளினின்றும் உயிரியம் (Oxygen) விடுவிக்கப் பெற்றிருக்கலாம் ; இதுவே அபரிமிதமான உயிரியம் காணப்பெறுவதற்குக் காரணமாகவும் இருக்கலாம் என்பதாகவும் ஊகிக்கின்றனர் அவர்கள். அடியிற் கண்டவாறு இச் சோதனை செய்யப்பெற்றது. மண்தோண்டும் உறுப்பால் சேகரிக்கப்பெற்ற மண்ணைக் கொண்டு விரல் குமிழ்போன்று இருக்கும் முதல் மண் அறை யொன்றில் ஒளிச்சேர்க்கை (Photo synthesis) உள்ள அடையா ளங்கள் ஏதாகிலும் உண்டா என்பதை ஆராய்ந்தனர் அறிவிய லறிஞர்கள். உயிரினங்கள் (தாவரங்கள் வாயு மண்டலத்தி லிருக்கும் கரியமிலவாயுவைச் சூரிய ஒளியின் துணையால் கரிய மிலச் சேர்க்கைப்பொருளாக (ஆற்றல்) மாற்றி, உயிரியத்தைக் கோருனாக வெளியிடுதலே ஒளிச்சேர்ச்கை என்ப ت தாகும் என்பதை நாம் அறிவோம். சூரிய விளக்கு ஒன்று செவ்வாய் போன்ற சூழ்நிலையில் சூரிய ஒளியைச் செயற்கை யாகத் தோற்றுவித்தது. உயிருள்ள எதுவும் அறையின் வெளியிலுள்ள கரியமிலத்தைத் தனது திசுக்களுள் (tissues) சேர்த்துக்கொள்ளும். கரியமிலம் கதிரியக்க வழி:துலக்கியின் சர்பன்-14) பூச்சு பெற்றது. ஐந்து நாட்களுக்குப் பிறகு இயின் வழி அகற்றப்பெற்றது. பயன்படுத்தப் பெருமல் ருக்கும் கார்பன்-14ஐ எடுப்பதற்காக, பின்னர் :ன் து எரியூட்டப்பெற்றது. கரியமிலவாயு ஏதும் இருப்பின் அதனை வெளியேற்ற கார்பன்-14 இருப்பதைக் காண ஆவி களே ஆராய்ந்தனர். இருக்குமாளுல் ஒளிச்சேர்க்கை வழியாக, உயிர்பெற்ற உயிரினம் மண்ணில் இருந்திருக்க வேண்டும் என்பது அவர்கள் கொள்ளும் முடிவு.