பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ2 தொல் உலகச் செலவு அனைத்துலக நாடுகளின் கூட்டுறவின் அடிப்படைவில் அமெரிக்காவிலிருந்து ஏரியல் (Aria) என்ற துணைக்கோள் அணிமண்டலத்தை ஆராய்வதற்காக இயக்கப் பெற்றது.* கதிரவனின் புதிர்க்கதிர்கள், புறஊதாக் கதிர்கள், கதிரவன் வெளிவீகம் புரோட்டான்கள் இவை காற்று மண்டலத்தைத் தாக்குவதால் எலக்ட்ரான்களும் நேர் மின்சார அயனிகளும் {Positive ions) வெளிவிடப் பெற்று அயனிமண்டலத்தில் நிறைந்துள்ளன. இத் துணைக்கோளிலுள்ள கருவிகள் எலக்ட்ரான்களின் அடர்த்தி, வெப்பநில்ை இவற்றை அனக்கும். தவிரவும், அயனிகளின் தன்மை, அவை அயனி மண்டலத்தில் பரவியுள்ள விதம் இவற்றையும் கணிக்கும். அன்றியும், கதிரவன் வெளிவிடும் புதிர்க்கதிர்கள், புறஊதாக் கதிர்கள் இவற்றின் அளவிற்கும் அயனிமண்டல மாறுதலுக்கும் உள்ள தொடர்பு, கதிரவ ஒளிக் குமுறலின்போது அண்டக் கதிர்களில் ஏற்படும் மாறுதல்கள் ஆகியவற்றையும் கணிக்கும். உருளை வடிவங்கொண்ட இத் துணைக்கோள் 57-5 செ. மீ. விட்டமும் 26 செ. மீ. நீளமும் உடையது. இதன் எடை 59.9 கிலோ கிராம். இது சுற்றிவரும் நீள்வட்டச் சுற்று வழியின் அண்மைத் தொலைவு 891 கி. மீட்டர்கள் ; சேய்மைத் தொல்வு 1,216 கி. மீ. இது பல ஆண்டுகள் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும். குறைந்தது ஓர் ஆண்டு வரை எடுகோள்களைத் தந்து கொண்டேயிருக்கும். இவற்றை எட்டு நாடுகள் பதிவு செய்யும். பூமியின் வடிவம் : வேன்காடு - என்பது மிகச் சிறிய உருளை வடிவங்கொண்ட துணைக்கோள். அது 16 செ. மீ. (6.4 அங்) குறுக்களவும், 1.5 கி. கிராமும் (3.3 இராத்தல்கள்) உடையது. இது மிக வெற்றிகரமாக இயக்கப்பெற்றது;" மிக உயர்ந்த சுற்றுவழியையும் அடைந்தது. இதன் மிக அண்மைத் தொலைவு 846 கி. மீட்டர்கள் ; மிகக் சேய்மைத் 18. 1983ஆம் ஆண்டு ஏப்பிரல் 28ஆம் நாள். 18. 1958ஆம் ஆண்டு மார்ச்சு 17 ஆம் நாள்.