பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விண்வெளியைத் துருவி ஆராய்தல் 综器 தொலைவு 3,848 கி. மீட்டர்கள். இந்த உயரத்தின் காரணமாக அஃது ஒரு நூற்ருண்டு அல்லது இரு ஆசித்ருண்டுகள் வரை விலும் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கலாம் என்று அறிவியலறிஞர்கள் எதிர்பார்க்கின்றனர். அது சுற்றி வரும் நீள்வட்டச் சுற்றுவழியில் மாறுதல்கள் ஏற்பட்டன. அந்த மாறுதல்களிலிருந்து பூமியின் வடிவம் இரு துருவங்களிலும் தட்டையாக்கப் பெற்ற உருளை போன்று இருப்பதாக அஃது அறிவித்துள்ளது. வரனிலே அறிக்கை: விண்வெளிச் செலவினை மேற்கொண் வோருக்கு வானிலையைப் பற்றிய தகவல்கள் மிகவும் இன்றி யமையாதவை. அத் தகவல்கட்காக எடுகோள்களைத் திரட்டும் பொருட்டு முதன்முதலாக இயக்கப்பெற்ற துணைக்கோள் வேன்கார்டு - 2 ஆகும். இஃது உருண்டை வடிவமானது ; 24 கிலோ கிராம் எடையைக் கொண்டது. அது முகில்களின் தொலைக்காட்சிப் படங்களை எடுத்து அனுப்பியது. அடுத்து அனுப்பப்பெற்ற டிைரோஸ்- என்ற துணைக்கோள் பூமியின் தென்வடலாக இயக்கப் பெற்றது. ஆர்க்டிக், அண்டார்ட்டிக் என்ற குளிர்ப் பகுதிகளின் வெப்பநிலை உலகின் வானிலையை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை அறியவே இங்கனம் இயக்கப்பெற்றது. அது 720 கி. மீ. உயரத்தில் வட்டமாகச் கற்றியது ; கிடைமட்டமான அச்சைச் சுழன்று கொண்டு பூமியைச் சுற்றி வந்தது. இங்கனம் சுற்றி வருங்கால் அதிலுள்ள ஒளிப்படக் கருவி பூமியை நோக்கின போதெல்லாம் முகிலப் படமெடுத்தது. படங்கள் தானியங்கு அமைப்பிளுல் காந்த நாடாவில் பதிக்கப் பெற்று, பின்னர் அப் பதிவுகள் தொலேக்காட்சிக் கருவி மின் துடிப்புகளாக மாற்றிப் பூமிக்கு அனுப்பியது. இந்த முறையில் 78 நாட்களில் 28000 படங்களே எடுத்துள்ளது. (ஒரு புயல் உருவாவதை) உலகி லுள்ள எந்த கருவியும் அறிவிப்பதற்குமுன்பே டிைரோஸ் அறிவித்தது வியப்பிற்குரியது. 14. 1959ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் காள், 15. 1889ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் நாள்.