பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொலை உலகச் செலவு அமெரிக்காவின் மாரினர்-4 என்ற துணைக்கோளும் செவ்வாயின் மேற்பரப்புப் பகுதிகளை ஒளிப்படம் பிடித்து அனுப்பியுள்ளது. இக் கோளின் மேற்பரப்பிலும் திங்களின் மேற்பரப்பிலுள்ளன போன்ற குழிகள் அதிகமாக இருப்பதை படங்கள் காட்டின. இக் கோளின் வளிமண்டலத்தைப்பற்றி பல செய்திகளும் திரட்டப்பெற்றுள்ளன. தவிர, இ, துணைக்கோள் வானநூல் வல்லுநர்கள் செவ்வாயில் கறுப்பு கோடுகள் போல் தோன்றுவதைக் "கால்வாய்கள்' என்று கூறியதைத் தவறு என மெய்ப்பித்தது. சென்ற ஆண்டு" செவ்வாயை நோக்கி மாரினர்.6 என்று துணைக்கோள் ஏவப்பெற்றுள்ளது. இதன் எடை 405 கிலே கிராம் ; காற்ருடி போன்ற உருவத்தையுடையது. இதில் இரட்டைக் காமிரா பொருத்தப் பெற்றுள்ளது. இது கதிரவனையும் அகத்திய விண்மீனையும் நோக்கியபடி சென்று கொண்டுள்ளது. இது செவ்வாயை அடைய ஐந்து மாத காலம் ஆகும். அதற்குள் அது கதிரவனைப் பாதித் தூரம் சுற்றிவிடும். சூலைத் திங்கள் 31ஆம் நாள் அது செவ்வாய்க்கு மிக அருகில் செல்லுங்கால் அது செவ்வாயிலிருந்து 3,200 கி.மீ தொலைவிலிருக்கும். செவ்வாய்க் கோளின் நடுக்கோட்டிற்கு மேலாக அது கடுகிச் செல்லுங்கால் செவ்வாய்க் கோளில் கால்வாய்போல் தோன்றும் இடங்களையும், இருண்ட இடம் களையும் 50 படங்கள் பிடிக்கும். இப் படங்கள் முன்னர் கிடைத்த படங்களைவிடப் பத்து மடங்கு அதிக விவரங்கள் அடங்கியனவாக இருக்கும். - மாரினர்.6ஐத் தொடர்ந்து அனுப்பப்பெற்ற மாரினர்-; ஆகஃச்டு 5ஆம் நாள் செவ்வாயைக் கடக்கும். இது செவ்வாயின் துருவமுனைக்கு மேலாகக் கடந்து செல்லும்ாறு 5. 1965ஆம் ஆண்டு இயக்கப் பெற்றது. 6. 1969ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதி வாரம். 7. 1969ஆம் ஆண்டு மார்ச்சு 27ஆம் நாள்.