பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறகோள்களின்மீது கவனம் 8i கூடிய தொலை நிகழ்ச்சி அறிகருவி பொருத்தப் பெற்றிருந்தது. அறிவியலறிஞர்கள் திட்டமிட்டபடி அஃது அதே ஆண்டு திசம்பர் 14ஆம் நாள் வெள்ளியின் அருகில் 8.45,600 கி. மீ. சேய்மையில் செல்லுங்கால் பல்வேறு தகவல்களைக் குறியீடு களாக அனுப்பியது. முக்கியமாக வெள்ளியில் காந்த மண்டலம் இல்லை என்பது மாரினர் அறிவித்த செய்தியாகும். இச் செய்தியால் நாம் அறியவேண்டுபவை : வெள்ளியில் காந்த மண்டலம் இல்லையாதலால் கதிரவனின் கதிர்வீச்சு நேரடியாக அக் கோளைத் தாக்குகின்றன். எனவே, வெள்ளியின் வளிமண்டலத்தில் அயனிகள் அதிகமாக இருக்கும். இந்த அயனிமண்டலத்தின் வெப்பநிலையைத் தான் வானெலி அலைகளைக்கொண்டு வெள்ளியை ஆய்ந்த அறிவியலறிஞர்கள் 600°F என்று அறிவித்தனரேயன்றி வெள்ளியின் புறப்பரப்பின் வெப்பநிலையை அன்று என்பதை நாம் அறிதல்வேண்டும். இத் தகவலிலிருந்து அண்டக் கதிர்களும் மற்றக் கதிர் வீச்சுகளும் புவிக்காந்த மண்டலத்தால் கட்டுண்டு கிடப்பதே வான் அல்லென் கதிர் வீச்சு வளை சூழல்' ஆகும் என்ற கொள்கையை அரண் செய்கின்றது. இக் கோளினைப் பற்றிய புதிர்கள் பலவற்றை விளங்க வைப்பதற்கு இன்னும் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல் வேண்டும். செவ்வாயைப்பற்றி ஆராய்ச்சி: இக் கோளைப்பற்றி இரஷ்யா ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. செவ்வாயை நோக்கி ஒரு விண்வெளிக்கலம் இயக்கப்பெற்றது. அஃது ஏழு திங்கள் கட்குப் பிறகு செவ்வாயை அணுகிச் சென்றது. நெடுந்தொலை விண்வெளியை ஆராய்வது, கோளிடைத் தொலைவிலிருந்து பூமியுடன் வாளுெலித் தொடர்பு கொள்வது, செவ்வாய்க் கோளைப் படம் பிடித்துப் பூமிக்கு அனுப்புவது என்பனவே இத் திட்டத்தின் நோக்கம். இங்ங்னம் கிடைக்கும் படங்களிளுல் செவ்வாயில் உயிரினங்கள் உண்டா என்பதை, அறுதியிடலாம் என்று அறிவியலறிஞர்கள் கருதுகின்றனர். 4. 1982ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள். தொ. உ. செ.- ே