பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தொலை உலகச் செலவு புறப்பட்டதிலிருந்து முதல் ஏழு நாள்களில் பதினறு இலட்சம் கி. மீ. வரை பயணம் செய்தது. இந்த நெடுந்தொலைவுப் பயணத்தில் 87 விண்கற்களே அதனைத் தாக்கியதாக அறியப் பெற்றன. எனவே, விண்வெளிப் பயணத்தில் விண்கற்களால் அதிகமான விபத்து ஏற்படாது எனக் கருதலாம். வெள்ளியைப்பற்றிய ஆராய்ச்சி : இரஷ்யா வெள்ளியை நோக்கி ஒரு துணைக்கோளை ஏவியது. சில நாள்களுக்குப் பின் அந்த விண்வெளிக் கலத்திலிருந்த வானுெலி பரப்பிகளில் ஏற்பட்ட கோளாறுகளினல் செய்திகள் பூமியை எட்டவில்லை. அதன்பிறகு இரஷ்யா பல கலங்களை ஏவியுள்ளது. அமெரிக்கா மாரினர்.i (Mariner) என்ற கோளின. விண்வெளிக் கலத்தை இயக்கியது. அது திட்டமிடப்பெற்ற திசையினின்றும் அதிக மாக வழிவிலகிச் சென்ற தளுல் அஃது இராக்கெட்டுத்தளத் தற்காப்பு அதிபரால் அழிக்கப் பெற்றது. அடுத்து, மாரினர்-2 இயக்கப்பெற்றது. ஆதன் நீளம் 3.6 மீட்டர். பதினேழு மணிநேரத்தில் 2,56,000 கி. மீ. தொலைவுக்குச் சென்று விட்டது. திட்டமிட்டபடி இயங்கிளுல் அது வெள்ளிக்கு. 16,000 கி. மீ. அருகில் செல்லும் என்றும், அந்நிலையில் அது வெள்ளியைப்பற்றிய அரிய தகவல்களை அறிவிக்கும் என்றும் அறிவியலறிஞர்கள் கருதினர். இந்த விண்வெளிக்கலம் தன் பயணத்தில் தான் செல்லும் திசையை அறிவித்துக்கொண்டே சென்றது. எட்டாம் நாள் அது செல்லும் திசையின் மாறுபாட்டை அறிந்து ஒரு வானொலிக் கட்டளையால், அக் கலத்திலுள்ள திசைமாற்றும் பொறியினை இயக்கிக் குறையினைத் தவிர்த்தனர். - இருபத்தெட்டுக் கோடியே எண்பது இலட்சம் கி. மீட்டர் தொலைவிலுள்ள வெள்ளியை ஆராய இயக்கப்பெற்ற அத் துணைக்கோளில் தொலைவிலுள்ள எடுகோள்களை அனுப்பக் 1. 1961ஆம் ஆண்டு பிப்பிரவரித் திங்கள். 2. 1963ஆம் ஆண்டு சூலை 33ஆம் நாள். 8. 1963ஆம் ஆண்டு ஆசஃச்டு 27ஆம் நாள்.