பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறகோள்களின் மீது கவனம் 79 கதிரவ மண்டலம் : ஒரு செயற்கைத் துணைக்கோள் கதிரவனைச் சுற்றி வரவேண்டுமாளுல், அது முதலில் பூமியின் ஈர்ப்பு ஆதிக்கத்திலிருந்து விடுபட்டுக் கதிரவனின் ஆதிக்கத் திற்கு உட்பட்டாதல் வேண்டும். மணிக்கு 40,000 கி. மீட்டர் வேகத்தையும் மீறிய வேகம் துணைக்கோளிற்கு ஊட்டப் பெறின் அது பூமியின் ஈர்ப்பு ஆதிக்கத்திலிருந்து விடுபடும். அமெரிக்காவின் பயணியர்-3 என்ற துணைக்கோள் பூமிக்கும் :வள்ளிக்கும் இடையில் கதிரவனைச் சுற்றி வருமாறு தோர் . ஏபிள் (Thor - Able) என்ற மூன்று அடுக்கு இராக்கெட் டிஞல் இயக்கப்பெற்றது. இசாக்கெட்டு ஊட்டிய மாபெரும் இேகத்தில் அத் துணைக்கோள் பூமியின் கவர்ச்சியைவிட்டு வெளியேறியது. பூமி கதிரவனைச் சுற்றும் வேகம் மணிக்கு 104.000 கி. மீ. பூமியின் கவர்ச்சியினின்றும் விடுபட்டவுடன் துணைக்கோளின் வேகம் கிட்டத்தட்ட 1,28,000 கி. மீ. (4,0000-1,04,000) ஆக உயர்ந்தது. இந்த வேகம் கதிரவனை வலம்வருவதற்குப் போதுகானது. ஆகவே, பயணியர் கலம் பூமிக்கும் வெள்ளிக்கும் இடையில் பகலவனச் சுற்றிக்கொண்டே இருக்கும். இஃது ஒரு முறை சுற்றுவதற்கு 312 நாள்கள் ஆகும். பயணியர்-3 65 செ. மீ. குறுக் களவுள்ள உருண்டை வடிவானது. இதன் எடை 43.5 கி. கிராம். இதிலிருந்து கை போல் நீட்டிக் கொண்டிருக்கும் உறுப்புகள் ஒவ்வொன்றிலும் 1,200 கதிரவ மின்கலங்கள் பொருத்தப் பெற்றுள்ளன . இக் கலங்களில் சேமிக்கப் பெறும் மின் குற்றலைக்கொண்டு இரண்டு தொலே நிகழ்ச்சிக் கருவிகள் இயங்குகின்றன. இக் கருவிகள் திரட்டும் எடுகோள்கள் பூமியினின்றும் வாஞெலிக் கட்டளைகள் வந்தவுடன் பூமிக்கு அனுப்பப் பெறுகின்றன. இத் துணைக் கோள் பூமியிலிருந்து நான்கு கோடி கி. மீ. தொலேவில் இருந்த வரையில் செய்திகளே அனுப்பியது. அத் தொலைவினை மீறிய பிறகு செய்திகள் வரவில்லை. இத் துணைக்கோள் கதிரவனின் கதிர்வீச்சு, தொலைவான விண்வெளியில் நிலவும் அண்டக் கதிர்களின் அளவு, பூமியின் காந்த மண்டலம், விண்கற்களின் தாக்குதல் ஆகிய நான்கு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டது. அது