பக்கம்:தொலை உலகச் செலவு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. பிறகோள்களின்மீது கவனம் பூமிக்குத் திங்கள் என்ற ஒரே துணைக்கோள் இருப்பதனல் அடுத்த பயணம் கதிரவனின் எட்டு பிறகோள்களுள் ஒன் றினுக்கு மேற்கொள்ளப்பெறும். ஆல்ை, பூமிக்கு மிகவும் அருகிலுள்ளனவும் கதிரவனைச் சுற்றி விண்வெளியில் இயங்கு வனவுமான வெள்ளியும் செவ்வாயும் இப் பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பெறலாம் என்று நாம் கருதுவது இயல்பே யாகும். எனினும், எளிதாக அடையக் கூடிய வேறு இலக்கு களும் உள்ளன. தொலையுலகச் செலவில் கோள்களின் அண்மை மட்டிலும் கவனிக்க வேண்டிய ஒரு கூறு அன்று; வேறு பல கூறுகளும் உள்ளன. செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையிலுள்ள 4,80,00000 கி. மீ. அகலமான விண்வெளியில் பல்லாயிரச் சிறுகோளத்திரள்கள் (Asteroids) சுற்றி வருகின்றன. இவற்றுள் சில கதிரவனுக்கு மிகத் தொலைவில் உள்ளன : இவை சில சமயம் வியாழன், சனி இவற்றின் சுற்று வழிகளையும் நெருங்கி வருகின்றன. கதிரவனுக்கு மிக அண்மைத் தொலைவில் வருங்கால் இவை பூமி, வெள்ளி, புதன் இவற்றின் சுற்று வழிக்குள் வந்து சேர்கின்றன. இங்ங்னம் இவை பூமிக்கு அருகில் வருங்கால் இவற்றைத் தொலே உலகப் பயணத்திற்கு இலக்குகளாகக் கொள்ளலாம். இப் பயணத்திற்கு அதிகமான எரிபொருள்களும் தேவையில்லை. இவற்றின் தொலேவு திங்களின் தொலைவைவிடப் பன்மடங்கு அதிகமாக இருப்பினும், இவற்றின் ஈர்ப்புவிசை குறைவாக இருப்பதால் இவற்றிற்குக் குறைவான எரிபொருள் செலவிலேயே போய் வரலாம். தவிரவும், இவற்றுள் நேர்வேகம் குறைவாக உள்ள வற்றையே இப் பயணத்திற்காகத் தேர்ந்தெடுத்தல் மிகவும் இன்றியமையாதது. இக்கோள்கட்குப் பயணத்தை மேற் கொள்வதற்கு முன்னர் இக் கோள்களைப் பற்றிய ஆராய்ச்சி மிகவும் இன்றியமையாதது.