பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

93 பொருட்கும் இடமாகிய செய்யுளியல் உணர்த்தி, அதன்பின் வழக்கு இலக்கணமாகிய மரபியல் உணர்த்தினார் என்க ւ, վԱI I_IIT : இவ்வாறு தொகுத்துக் கூறல் என்னும் திறனாய்வு முறையில், தொல்காப்பியத்தில் மூன்றதிகாரத்தும் கூறியுள்ள பொருள்கள் அனைத்தையும் அவர் கூறியுள்ளதைக் காணலாம். மேலும், தொல்காப்பியர் அகத்திணை இயலில் காலம் என்னும் முதற்பொருளைத் திணைக்கு உரிமையாக்கிக் கூறும்பொழுது, கார் என்னும் பெரும்பொழுதும் மாலை என்னும் சிறுபொழுதும் முல்லைத்திணைக்கு உரியதென்றும், கதிர் முன்பனி என்னும் பெரும்பொழுதிரண்டும் நடுயாமமும் குறிஞ்சித்திணைக்கு உரியதென்றும், வைகறை, விடியல் என்னும் சிறுபொழுதிரண்டும் மருதத்திணைக்குரிய தென்றும், எற்பாடு என்னும் சிறுபொழுது நெய்தலுக் குரியதென்றும் இளவேனில் முதுவேனில் பின்பனி என்னும் பெரும்பொழுது மூன்றும், நண்பகலும் பாலைக்குரியது என்றும் பகுத்துக் கூறியுள்ளார். இவர் இவ்வாறு கூறியுள்ளதற்கு இயைபான காரணம் என்னை எனக் கருதி உரையாசிரியராகிய இளம்பூரணர் கூறும் திறன் நாம் ஒதி இன்புறுதற்குரியதாகும். அதனைக் ேேழ காணலாம்:- இவ்வறுவகைப் பருவமும் அறுவகைப் பொழுதும் இவ்வைந்திணைக்கு உரியவாறு என்னையெனின், சிறப்பு நோக்கி என்க. என்னை சிறந்தவாறு எனின்? முல்லையாகிய நிலனும் வேனிற் காலத்து வெப்பம் உழந்து மரனும் புதலும் கொடியும் கவினழிந்து கிடந்தன. அவை புயல்கள் முழங்கிப் பெய்யக் கவின்பெறும் ஆதலின் அதற்கு அது சிறந்ததாகும். மாலைப்பொழுது இந்நிலத்திற்கு இன்றியமையாத முல்லை மலருங் காலமாதலானும், அந்நிலத்துக் கருப்பொருளாகிய ஆனிரை வருங்கால மாதலானும், ஆண்டுத் தனியிருப்பார்க்கு இவை கண்டுழி வருத்தம் மிகுதலின் அதுவும் சிறந்தது ஆயிற்று. குறிஞ்சிக்குப் பெரும்பான்மையும் களவிற்புணர்ச்சி பொருளாதலின், அப்புணர்ச்சிக்குத் தனியிடம் வேண்டு மென்றே, அது கூதிர்க்காலத்துப் பகலும் இரவும் துண்டுளி