பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சிதறி இயங்குவார் இலராம் ஆதலான், ஆண்டுத் தனிப்பாடல் எளிதாகலின், அதற்கு அது சிறந்தது. நடுநாள் யாமமும் அவ்வாறாதலின் அதுவும் சிறந்தது. மருதத்திற்கு நிலன் பழனஞ்சார்ந்த இடமாதலான் ஆண்டு உறைவார்மேன்மக்கள் ஆதலின், அவர் பரத்தையிற் பிரிவுழி அம்மனையகத்து உறைந்தமை பிறர் அறியாமை மறைத்தல் வேண்டிய வைகறைக்கண் தம் மனையகத்துப் பெயருமின்றி, ஆண்டு மனைவி ஊடலுற்றுச் சார்கிலளாம் ஆதலால் அவை அந்நிலத்திற்குச் சிறந்தன. நெய்தற்குப் பெரும்பான்மையும் இரக்கம் பொரு ளாதலின் தனிமையுற்று இரங்குவார்க்குப் பகற்பொழுதிலும் இராப்பொழுது மிகுமாதலின், அப்பொழுது வருதற் கேதுவாகிய ஏற்பாடு கண்டார் இனி வருவது மாலையென வருத்தமுறுதலின் அதற்கு அது சிறந்தது என்க. பாலைப் பொருளாவது பிரிவு. அப்பிரிவின்கண் தலைமகற்கு வருத்தம் உறும் என்று தலைமகள் கவலுங்கால், நிழலும், நீரும் இல்லாத வழி ஏகினார் எனவும் கவலுமாதலின் (நிழலும் நீரும் அருகித் தோன்றும் வெப்ப காலமாகிய) அது அதற்குச் சிறந்தது என்க" என்பர். இளம்பூரணர் இவ்வாறு கூறுதல் உய்த்துணர்ந்து கூறும் திறனாய்வு முறையாகும். அகத்திணையியலில் பாலைத்திணையைக் கூறி அதன்கண் நிகழும் பிரிவில் நற்றாய், செவிலி, தோழி, கண்டோர், தலைமகன் என்னும் ஐவர் கூற்று நிகழுமாறு ஐந்து நூற்பாக்களில் உணர்த்தியபின், "எஞ்சி யோர்க்கும் ஒஞ்சுதல் இலவே" (45) என்று தொல்காப்பியர் கூறுகிறார். இந்நூற்பா உரையில் இளம்பூரணர் இதுகாறும் பிரிவின் கண் கூறுதலுரியார் பலருள்ளும் நற்றாயும் செவிலியும் தோழியும் கண்டோரும் தலைமகனும் கூறும் கூற்றுக் கூறினார். இஃது அவரையொழிந்த தலைமகட்கும், பாங்கற்கும், பார்ப்பார்க்கும், பாணர்க்கும், கூத்தர்க்கும், உழையோர்க்கும் கூற்று நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று என்று கூறினார்.