பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 "உள்ளுறைக்கண் வரும் உவமமும் ஒழிந்த உவமமும் என இரண்டு வகையாலும் திணை உணரும் வகை தப்பாதாகும்" என்றும், "உள்ளுறையாவது கருப்பொருளுள் தெய்வம் ஒழிந்த பொருளை இடமாகக் கொண்டு வரும் என்று சொல்லுவர் இலக்கணம் அறிந்தோர்" என்றும், "உள்ளுறுத்துக் கருதிய பொருள் இதனோடு ஒத்து முடிக என, உள்ளுறுத்துக் கூறுவதே உள்ளுறை உவமம்" என்றும், "உள்ளுறை யொழிந்த உவமந்தான் (வெளிப்பட) உணரும் வகையான் வரும்" என்றும் இளம்பூரணர் உரை கூறுகின்றார். "உள்ளுறையுவமம் ஏனையுவமமென்னும் நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் கூறும் உரை சிறிதும் பொருந்துவதா யில்லை. உவமம் உள்ளுறை உவமமென்றும், ஏனை யுவமமென்றும் இருவகையாக வந்து, அகத்தினைப் பொருளைத் தப்பாது உணர்த்தும் என்று இளம்பூரணர் உரைப்பதே நல்ல உரையாகும். அவ்வுள்ளுறை உவமமானது கருப்பொருளுள் தெய்வம் ஒழிந்ததைத் (தெய்வம் ஒழிந்த கருப்பொருள்களை) தான் தோன்றுதற்குரிய இடமாகப் பெற்று வரும். அவ்வாறு வருங்கால், உள்ளுறுத்துக் கருதிய பொருள் இக்கருப்பொருளுடன் ஒத்து முடிக என உள்ளே குறித்துக் கொண்டு கூறும். அஃதே உள்ளுறை உவமமாம் என்பர். இளம்பூரணர், "உள்ளுறுத்து" என்ற நூற்பாவுரையுள் ஏனையுவமத்திற்கும் உள்ளுறையுவமத்திற்கும் நல்ல வேறுபாடொன்றனைக் கூறியுள்ளார். அஃது ஏனை உவமையாற் கொள்ளப்படுவது வினை, பயன், மெய் உருவாகும்; உள்ளுறை உவமையாற் கொள்ளப்படுவது பொருள் என்பர். இங்கே பொருள் என்றது உரிப்பொருளை. "வெறிகொள் இனச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக் குறைபடுதேன் வேட்டும் குறுகும் - நிறைமது சேர்ந்து உண்டாடுந் தன்முகத்தே செவ்வி யுடையதோர் வண்டா மரைபிரிந்த வண்டு". இப்பாட்டுள் நிறைந்த தேன்பொருந்தி உண்டு ஆடப்பெறும் தனது முகத்தே அழகினையுடைய ஒன்றாகிய