பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97 சிறந்த தாமரை மலரைப் பிரிந்த வண்டானது கூட்டமாகிய ஏனைய வண்டுகள் நுகர்ந்து விட்டுச் சென்ற காவிமலரின் குறைபடு தேனையும் விரும்பிச் சேரும் என்று கூறப்பட் டுள்ளது. இங்கே நிறைந்த இன்பத்தைத் தரும் முகச் செவ்வியையுடைய தலைமகளைப் பிரிந்த தலைமகன் பலரால் இன்பம் நுகரப்பட்டுக் குறைந்த இன்பத்தைத் தரும் பரத்தையைக் கருதிப் பிரிந்தான் என்ற ஊடற்பொருள் கூறப்படுகிறது. புறத்தினை இன்ப நிலையில் பெருமிதம் கோட்டங் கண்ணியும் கொடுந்திரா ஆமையும் வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும் ஒத்தன்று மாதோ இவற்றே தெற்றிய தனிநிலை அலறக் கூவை போழ்ந்துதன் வடிமாண் எஃகம் கடிமுகத் தேந்தி ஒம்புமின் ஒம்புமின் இவண் என ஓம்பாது தொடர்கோள் யானையில் குடர்கால் தட்ப கன்றமர் கரவை மான முன்சமத் தொழிந்ததன் தோழற்கு வருமே. புற. 275 புறத்தினை இன்ப நிலையில் வெகுளி உறுதுப் பஞ்சாது உடல்சினம் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை. புறநானூறு - 72 புறத்தினை இன்ப நிலையில் உவகை வையை வருபுனல் ஆடல் இனிதுசொல் செவ்வேற்கோ குன்றம் நுகர்தல் இனிதுகொல் வைவேல் துதியன்ன கண்ணார் துணையா வழிமயக் குந்து மருடல் நெடியான் நெடுமாடற் கூடற் கியல்பு - பரிபாடல்.