பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 மற்றொரு பண்பு நீர்மை என்பது. நீர்மை என்பதற்குத் தன்மை என்றும், இயல்பு என்றும் இருபொருள் உண்டு. காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள என்னும் குறள் உரையில் பரிமேலழகர் அன்ன நீரார்க்கே என்பதற்கு, அத்தகைய இயல்பினை உடையார்க்கே, என்று உரை கூறியுள்ளார். தமிழ்மொழி, வடமொழி முதலான வற்றைப் போல் ஒலி விகாரம் உடையதன்று. இயல்பான ஒசையை அது பெற்றுள்ளது. அதனால் அதனை நீர்மையை, இயல்பை, தன்மையை உடையது என்று கூறுவது முற்றிலும் பொருந்தும். எனவே, இனிமை, நீர்மை என்று பொருள்படும் தமிழ் என்னும் சொல் தமிழ்மொழிக்குக் காரணப் பெய ராகவே அமைந்துள்ளது. தமிழ் என்னும் சொல், தமிழ்மொழியில் முன்னே பண்புச் சொல்லாக வழங்கப்பட்டுப் பின்னர், விகுதி பெறாமலே தமிழ்மொழிக்கும்; தமிழ் மக்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெயராக வழங்கியுள்ளதைப் பார்த்தோம். இத் தமிழ் என்னும் சொல்லைத் திராவிடம் என்ற சொல்லின் திரிபென்று கொள்வது அறிவியலுக்குப் பொருந்துவதாகத் தெரியவில்லை. தமிழர் சமஸ்கிருதத்தைக் குறிக்க, ஆரியம் என்றும், வடமொழி என்றும் பெயர்வைத்து வழங்குவது போல, வடமொழியாளரும் தமிழ்மொழியைக் குறிக்க வழங்கிய பெயரே திராவிடம் என்னும் சொல்லாகும். தமிழ்மொழி பாரத நாட்டின் தென்கோடியில் நன்கு வழங்கும் தொன்மொழியாகும். இது பலவகை இலக்கியங் களையும் இலக்கண நூல்களையும் பெற்றிருக்கின்றது. தமிழ்நாடு மக்கள் பேசும் மொழியாலும் நாட்டிற்குப் பெயர் வைத்து வழங்கப்படுகிறது. அந்த முறையில் தமிழ் மொழியைப் பேசும் மக்கள் உறைவது தமிழ்நாடு ஆகும். தமிழ்நாடு எதுவென்று வினாவின், உடனே "வடவேங்கடம்