பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 முதலாயிருக்கும் காமம், அக்காமத்தின் உயர்ந்த பகுதி கூறப் பட்டிருக்கிறது. இனி அவர் கூறும் முறையினை அறிந்து கொள்ள முயலுவோம். தொல்காப்பியர் அகத்திணையியலின் தொடக்கத்தே அகத்திணைப் பொருளாகிய காமத்தைக் கைக்கிளை, ஐந்திணை, பெருந்திணை என ஏழ்திணையாகும் என்றனர். இவற்றுள் கைக்கிளை ஒருபாற் காமம் என்றும், நடுவண் ஐந்திணை என்பது, நிலமும் காலமும், கருப்பொருளும் அடுத்தும் புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் என்று சொல்லப்பட்ட ஐந்து உரிப்பொருள், ஒத்த அன்பும் ஒத்த குலனும் ஒத்த வடிவும் ஒத்த குணமும் ஒத்த செல்வமும் ஒத்த இளமையும் உளவழி நிகழுமாதலின் ஐந்திணைக் காமம் என்று கூறப்பட்டுச் சிறப்புடையதாக உள்ளது. அது, கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் நடுவண் ஐந்து திணையாக வழங்கப்படுதலின், நடுவண் ஐந்திணை எனப் பெயர் கூறப்படும் என்றனர். அந்நடுவண் ஐந்திணையுள் பாலைத்திணை என்பது, எல்லா நிலத்திற்கும் பொதுவாக (நடுவனதாக ஒதப்படுதலின் நடுவனது என்று பெயர் பெறும் பாலைத்திணை எல்லா நிலத்திற்கும் பொது ஆதலின் அதனைத் தவிர்த்து ஏனைய நாற்றிணைமாட்டுக் கடல் சூழ்ந்த இவ்வுலகம் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. பாடலுள் வந்துள்ள பொருள்களைப் பிரித்தல் அகத்தினைப் பாடலுள் வந்துள்ள பொருள்களை ஆராய்ந்து பார்த்தால் முதற் பொருளென்றும் கருப்பொருள் என்றும் உரிப்பொருள் என்றும் மூன்று வகையாகப் பிரித்துக் கொள்ளலாம். உலகத்துப் பொருளெல்லாம் இம்மூன்று பகுப்பில் அடங்கி நிற்கும். அவற்றுள் முதற் பொருள் என்றது, தோன்றும் பொருள்கட்குரிய இடமும், காலமும் ஆதலின், அது இடம், காலம் என இருவகை யாயிற்று. காடும் காடும் சார்ந்த இடமும் முல்லைத்திணைக்கு உரியன என்றும், மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சித் திணைக்கு உரியன என்றும், இனிய புனல் நிறைந்த இடமும் அது சார்ந்த இடமும் மருதத் திணைக்கு உரியனவென்றும், கடல் மணற் பரப்புடைய நிலமும் அது