பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105 சார்ந்த இடமும் நெய்தல் திணைக்கு உரியனவென்றும் இடமாகிய முதற்பொருள் வகுக்கப்பட்டது. காலத்தினை யாண்டின் பிரிவாகிய பெரும் பொழுதென்றும்,ஒருநாளின் பிரிவாகிய சிறுபொழுதென்றும் இரண்டாகப் பிரித்துக்கொண்டு கார்காலமாகிய பெரும் பொழுதும் மாலைக்காலமாகிய சிறுபொழுதும் முல்லைத் திணை என்றும், கூதிர் முன்பனி என்னும் பெரும்பொழுதும் இடையாமமாகிய சிறுபொழுதும் குறிஞ்சித்திணை என்றும், வைகறை, விடியல் என்னும் சிறுபொழுது மருதத்திணை என்றும், எற்பாடு என்னும் சிறுபொழுது நெய்தல் திணை என்றும்,சிறுபொழுதுகளுள் நண்பகலுள் பெரும்பொழுது களுள் பின்பனியும் இருவகை வேனிலும் பாலைத்திணை என்றும் காலமாகிய முதற்பொருள் வகுக்கப்பெற்றுள்ளது. பின்னர் ஒவ்வொரு திணையிலும் காலம் பற்றியும் இடம் பற்றியும் தோன்றுகின்ற உணவுப் பொருள், மா, மரம், புள், பறை செய்தி, யாழின் பகுதி முதலியனவும் அவ்வத்திணையில் வாழ்மக்களும் அவரால் வழிபடப்பெறும் தெய்வமும் கருப்பொருளென்று வழங்கப்படுமென்றும், குறிஞ்சித்திணைக்குப் புணர்தலும், பாலைத்திணைக்குப் பிரிதலும், முல்லைத் திணைக்கு இருத்தலும், நெய்தல் திணைக்கு இரங்கலும் மருதத்திற்கு ஊடலும் உரிப்பொரு ளென்று வகுக்கப்பட்டுள்ளன. 1. ஐந்திணைக் காமத் தலைமக்களும் கைக்கிளை பெருந்திணைக்குரிய தலைமக்களும் அவ்வத்திணையில் தொன்றுதொட்டு வந்த பொருள் வளமும், தொழில் வளமும் நிறைந்த ஆயர் வேட்டுவர் கிழார் மறவர் பரதவர் என்பவரே ஐந்திணைக் காமத்திற்குரிய தலைமக்களாவார் என்றும், அடியோரும், வினைவலரும் ஐந்திணைக் காமத்திற்கு உரியராகார் என்றும், அவர் கைக்கிளை பெருந்திணைக்கே உரியவரென்றும் தொல் காப்பியர் உணர்த்துகின்றார். "அடியோர் பாங்கினும்" (அகத்திணையியல் - 25) என்னும் நூற்பாவுரையில் இளம்பூரணர் "இவர் (அடியோரும்