பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 வினைவலரும்) அகத்திணைக்கு உரியரல்லரோ எனின்? அகத்திணையாவன அறத்தின் வழாமலும் பொருளின் வழாமலும் இன்பத்தின் வழாமலும் இயலல் வேண்டும். அவையெல்லாம் பிறர்க்குக் குற்றேவல் செய்வார்க்குச் செய்தல் அரிதாகலானும், அவர் (அடியோரும் வினைவலரும்) நானுக் குறைபாடுடையவராகலானும், குறிப்பறியாது வேட்கை வழியே சாரக் கருதுவராகலானும், இன்பம் இனிது நடாத்து வோர் பிறர் ஏவல் செய்யாதவர் என்பதனாலும், இவர் புறப்பொருட்கு உரியராயினார் என்க" என்று எழுதிச் செல் கின்றார். இதனால் ஐந்திணைக் காமத்தின் சிறப்பு புலப்படும். ஐந்தினைக் காமத்தைப் பாடுவதற்குரிய பாடல்கள் - நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட் டாயிரு பாவினும் உரிய தாகும் என்மனார் புலவர் = (அகத்திணையியல் - 35) என்ற நூற்பாவுரையுள் இளம்பூரணர் புலனெறிவழக்கம் என்பது அகத்திணை ஏழினையும் குறிக்கும் என்று கொள் கின்றார். நச்சினார்க்கினியர் இந்நூற்பாவை அடுத்து ஐந்திணை பற்றிய இலக்கணமே வருதலால் புலனெறி வழக்கம் என்றது ஐந்திணைக் காமத்தையே அவ்வைந்திணைக் காமம் கலியும் பரிபாடலும் என்கின்ற அவ்விரண்டு கூற்றுச் செய்யு ளிடத்தும் நடத்தற்கு உரியதாம் என்பர். அவ்வாறு கூறவே ஐந்திணைக் காமமானது முதல் கரு உரி என்று நாட்டிக் கூறும் நாடக வழக்காலும் வெறும் உரிப்பொருளொன்றுமே கூறும் உலகியல் வழக்காலும் பாடப்படும் என்பதாயிற்று. ஐந்தினைப் பாட்டில் இயற்பெயர் வரலாகாது மக்கள் நுதலிய அகனைந் திணையும் சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார் . (அகத்திணை - 59) மக்களே தலைமக்களாகக் கருதுதற்குரிய நடுவண் ஐந்திணைக் கண்ணும் திணைப்பெயராற் கூறினன்றி ஒருவனையும்