பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 ஒருத்தியையும் விதந்து கூறி அவரது இயற்பெயர் கொள்ளப் பெறார். எனவே நாடன், ஊரன், வெற்பன், துறைவன், கொடிச்சி, கிழத்தி என்பன போன்ற பொதுப்பெயராற் கூறவே ஐந்திணைக்குச் சிறந்ததாம். காமக்கூட்டம் தொல்காப்பியர் ஐந்திணைக் காமத்தை 'காமக்கூட்டம்' என்ற பெயரால் குறிப்பிடுகின்றார். அவ்வாறு கூறுகின்ற அவர், அதனை இரண்டு தொடர்மொழியால் சிறப்பிக் கின்றார். இன்பமும் பொருளும் அறனும் என்று சொல்லப் பட்டவற்றுடன் கூடிய காமக்கூட்டம், அன்பொடு புணர்ந்த காமக்கூட்டம் என்பன அவர் சிறப்புரையாகும். ஐந்திணைக் காமத்திற்குரிய தலைவன் தலைவி என்னும் இருவரும் ஒத்த அன்பினராகிக் காமத்தால் கூடுகின்ற இக்கூட்டம், முதலில் இருவர்க்கும் இன்பத்தைத் தந்து, அடுத்து இவர் ஒன்றியிருந்து செய்யும் குடும்ப வாழ்க்கையால் பொருளையும் அறத்தையும் தருகின்றது என்பது அச்சிறப்பால் உணரப்படுகின்றது. இவ்வாறு ஐந்திணைக் காமத்தைச் சிறப்பிக்கவே, ஏனைய கைக்கிளையும், பெருந்திணையும் இத்துணைச் சிறப்பில என்றாராயிற்று. சிறப்புக்கும் சிறப்பின்மைக்கும் காரணம் ஐந்திணையுள் அன்பு இருபாலாரிடத்தும் ஒத்திருத்தலும் கைக்கிளை, பெருந்திணையுள் அன்பு ஒவ்வாமையுமே ஆகும். அன்பிற்குக் காமவாயில் என்றொரு பெயர் உண்டு. இறையனார் களவியலும், 'அன்பின் ஐந்திணைக் களவெனப்படுவது' என்றும், களவு கற்பெனக் கண்ணிய ஈண்டையோர் உளம்நிகழ் அன்பின் உயர்ச்சி மேன' என்றும் கூறுகின்றது. காம இலக்கியத்தில் பேசப்படும் இருவகை நிலை எனவே, ஒருவன், ஒருத்தியான அன்புடையிருவர் புணர்தலாற் றோன்றும் இன்ப நிலையும், அவர் பிரிந்த பொழுதும், பிரிந்த காலைத் தலைவி ஆற்றியிருக்கும் பொழு _ம், ஆற்றியிராமல் தலைவி இரங்கும் பொழுதும் தலைவன் பரத்தையிற் பிரிந்த பொழுது தலைவி ஊடும் பொழுதும்