பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 உண்டாகும் துன்பநிலையும் ஆகிய இரண்டனையும் "காமங்கண்ணிய நிலை என்றே தொல்காப்பியர் கூறுவார். ஐந்திணைக் காமத்தையுடைய தலைமக்களுக்கு இருக்கவேண்டியவை ஒரு செயலுக்குத் தலைமை நிலை ஏற்பவர்க்கு நிர்வாகத் திறன், தம்கீழ்ப் பணிபுரிபவரைக் கடிய வேண்டு மிடத்துக் கடிந்தும், இன்சொல் கூறித் தழுவ வேண்டுமிடத்துத் தழுவியும் நடந்து கொள்ளும் நடைமுறை முதலியன வேண்டும். அதுபோலவே பணி புரிபவர்க்குத் தலைமை யாளருக்கு அடங்கியொழுகும் தன்மை, சோம்பலின்றிப் பயன் தருமாறு பணிபுரிதல் முதலியன அமையவேண்டும். அதனைப் போலவே தொல்காப்பியரும் சிறந்த ஐந்திணைக் காமத்திற் குரிய தலைமக்களுக்கு இருக்க வேண்டியவைகளைப் பற்றிக் கூறியுள்ளார். களவியல் இரண்டாம் நூற்பாவில் "ஒத்த தலைவனும் தலைவியும் காண்ப" என்று கூறுகின்றார். அவ்வொப்புமை, "பிறப்பும், குடிமையும், ஆண்மையும், யாண்டும், உருவும், காம வாயிலாகிய அன்பும் நிறையும், அருளும், உணர்வும், திருவும் எனப் பத்தாம் என்று மெய்ப்பாட்டியலில் கூறுகின்றார். இங்கே பிறப்பென்றது நற்குடியிலே பிறந்திருப்பது, குடிமை என்பது அக்குடிக் குள்ள நற்பண்புகளையெல்லாம் பெற்றிருப்பது. ஆண்மை என்பது இங்கே ஆண்தன்மையைக் குறிக்கவில்லை. ஒரு செயலை ஏற்ற ஆளும் தன்மையைக் குறிக்கின்றது. இது 1. நோயும் இன்பமும் இருவகை நிலையில் காமம் கண்ணிய மரபிடை தெரிய - (தொல், பொருளியல் -2) 2. பிறப்பே குடிமை ஆண்மை யாண்டொடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வோடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (தொல். மெய்ப்பாட்டியல் - 25)