பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 ஐந்திணைக் காமத் தலைமக்கட்கே உரிய சிறந்த பண்பாகும். அடியோர் வினைவலரிடத்தில் அடங்கிப் பணியாற்றும் தன்மையே உண்டு. யாண்டு என்பது காமம் நுகர்வதற்குரிய பருவம் உருவம் வடிவழகு, காமவாயில் காமத்திற்கு ஏதுவா யிருக்கின்ற இருவரது அன்பு நிறை என்பது மறை புலப்படாமல் நிறுத்தும் உள்ளம், என்பர் நச்சினார்க்கினியர். காப்பன காத்து கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம் என்பர் களவியல் உரையாசிரியர். அருள் என்பது பிறர் வருத்தத்திற்கு உதவ எண்ணல், உணர்வு என்பது காமவுணர்ச்சியை அறிதல், திரு என்பது ஆக்க முயற்சி. மேற்கூறிய ஒப்புமை பத்தும் ஐந்திணைக் காமத்திற்கு ஆக்கம் தருவனவாம். ஐந்திணைக் காமத்திற்கு ஆக்கம் தராத (அழிவினைச் செய்யும்) மெய்ப்பாடும் உள்ளன. அவற்றை நிம்பிரி, கொடுமை2, வியப்பு3, புறமொழி4, வன்சொல்5, பொச்சாப்பு6, மடிமை7, குடிமை8, இன்புறல்9, ஏழைமை10, மறப்பு:11, ஒப்புமை12 என்று கூறுகின்றார். அவற்றுள் நிம்பிரி என்பது காதலருள் ஒருவர் மேல் ஒருவர் பொறாமைப்படுதலாம். இதனை மனக்கசப்பு என்றும் கூறலாம். கொடுமை என்பது ஒருவர்க்கொருவர் கேடு சூழ எண்ணும் தீவினையுள்ளம். கடுஞ்சினமும் இதனுள் அடங்கும். வியப்பு என்பது ஒருவரிடத்தில் ஒருவர் வியக்கத்தக்க குணங்களிருப்பதாகக் கருதுதல். இது ஒத்துப் பழகுதற்குத் தடையாகும். புறமொழி என்பது ஒருவரை ஒருவர் காணாதவிடத்தே பழித்துக் கூறுதல். வன்சொல் என்பது கண்ணோட்டமின்றிச் சொல்லும் சொல். பொச்சாப்பு என்பது தம் ஒழுக்கத்தைக் கடைப்பிடியாமை. மடிமை என்பது சோம்பல். குடிமை என்பது இருவருள் ஒருவர் தம் குடியை மேலாக மதித்தொழுகுவது. ஏழைமை என்பது ஒப்புவகையிற் கூறிய திருவின்மை. பேதைமை என்றும் கூறுவர். மறப்பு என்பது ஒருவரை ஒருவர் மறந்து விடுவது. தலைவனோ தலைவியோ பிரிந்தால் ஒருவரை ஒருவர் நினைவின்றி மறந்துவிடுவது. துஷ்யந்தன் சகுந்தலையை மறந்தாற் போன்றதும் ஆகும். ஒப்புமை என்பது ஆண் பாலாயினும் பெண்பாலாயினும் தன்னால் காதலிக்கப் பட்டவர் போல் எதிர்ப்பட்டவரையும் விரும்புதல். இது