பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 கீழ்மக்கள் மாட்டு நிகழும். மேற்கூறிய தீயகுணங்கள் தலை மக்களிடத்தே உண்டாகின் ஒத்த அன்பால் தோன்றுகின்ற ஐந்திணைக் காமம் அழிந்து போகும். அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பொருளைக் கூறிய திருவள்ளுவர் காமத்துப்பாலில் ஒவ்வாக் காமங் களாகிய கைக்கிளை பெருந்திணைகளைக் கூறாது, சிறந்த காமமாகிய ஐந்திணைக் காமத்தையே கூறியுள்ளார். அதனைக் கூறும்பொழுது, மலரினும் மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப்படு வார் என்றொரு குறட்பாவினைக் கூறுகின்றார். இங்கே காமம் என்றது ஐந்திணைக் காமத்தை. அக்காமம் மென்மையான பொருளில், மிகச்சிறந்த மென்மையுடையது மலர். அம்மலரினும் மெல்லிது ஐந்திணைக் காமம் என்பர். தலைவனின் சில ஒழுகலாறு தலைவன் ஒரையும் நாளும் கருதியொழுகான். களவொழுக்கத்தில் ஒரையும் நாளும் பார்த்துக்கொண்டு தலைவியைக் கூடுவதென்பது உலகியலில் இயலாததென்பதை நாம் அறிவோம். இது உலகியல் பற்றிக் கூறியது. களவொழுக்கத்தில் பகற்குறி இரவுக்குறியிடத்தே தலைவியைக் கூடுதற்குச் செல்லும் தலைமகன் அங்கு செல்லும் வழியின் அருமையையும் அங்கு உண்டாகும் அழிவு, அச்சம், இடையூறு என்னும் இவைகளைக் கருத வில்லை; உரன் நிறைந்தவன் ஆதலின் (களவு 46). ஐந்திணைக் காமக் களவினை வெளிப்படுத்தற்குக் கருவியாயிருப்பன இரண்டாகும். ஒன்று அம்பல்; மற்றொன்று அலர். அம்பல் என்பது பேச்சு நிகழ்ச்சியில் வாராமல், இவர்களிடத்தே களவொழுக்கம் நிகழ்கின்றது போலும் என்று சிலருடைய கருத்து நிகழ்ச்சியில் மட்டும் நிகழ்வது. அலர் என்பது, இன்னானோடு இன்னாளிடை இது போலும் நிகழந்ததென விளங்கச் சொல்லி நிற்பது. இவற்றால் களவு வெளிப்படும். தலைவன், தலைவியைத் தலையளி செய்தலே களவு வெளிப்படுவதற்குக்காரணம் ஆயிற்று. அதனால்,