பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 அம்பலும் அலரும் களவுவெளிப் படுத்தலின் அங்கதன் முதல்வன் கிழவ னாகும் (களவியல் - 49) என்று தலைவனுக்குரியதாக நூற்பாச் செய்துள்ளார். தலைவி அச்சமும் நானும் உடையவளாதலால் அவள் செயலால் களவு வெளிப்படுமாறில்லை. வரைந்து கொள்ளும் முயற்சியைத் தலைவன் தொடங்கித் தலைவியை வரைந்து கொள்வான். இதுதான் தமிழர் மரபு. தோழியும் தலைவியும் வரைந்து கொள்ளும் முயற்சியை மேற்கொள்ளுமாறு தலைவனைத் துண்டி விடலாம். வெளிப்படையாக வரைந்து கொள்ளும் முயற்சியைத் தலைவனே செய்வன். இது களவு வெளிப்படா முன் வரைதல் களவு வெளிப்பட்ட பின் வரைதலென இருவகைப்படும். இவ்விருவகையாலும் வரைந்து கொள்ளும் முயற்சி தலைவன் கண்ணது. களவொழுக்கம் நிகழும்பொழுது தலைவன் நாடிடை யிட்டும் காடிடையிட்டும் தலைவியைப் பிரியாமல் இரவிலும் பகலிலும் சந்தித்ததற்கு உரியதாகுமாறு ஓரிடத்திலே பிரிந்திருப்பன். இதற்கு ஒருவழித்தனத்தல் என்று பெயர். அவன் அப்பொழுதுவரைதற்குப் பொருள் இல்லாத பொழுது அதற்காகப் பிரிதலும் உண்டு. இதற்கு வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிவு என்று பெயர் உண்டு. ஒதல் துது பகை என்னும் பிரிவுகளெல்லாம் கற்பொழுக்கத்தில் நிகழ்வன வாகும். களவு வெளிப்பாடு கற்பைப்போல் கருதப்பட்டாலும் வரைந்து கொண்ட பின்னர்தான் ஒதல் முதலானவற்றில் தான் பிரிவன். வரையாது பிரிதல் ஐந்திணைத் தலைமக னிடத்தில் நிகழாது என்பர். வெளிப்படை தானே கற்பினோ டொப்பினும் ஞாங்கர்க் கிளந்த மூன்றுபொரு ளாக வரையாது பிரிதல் கிழவோற் கில்லை (களவியல் - 51) தெய்வத்தால் (நற்பாலால்) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகனும், தலைமகளும் பாங்கன் நிமித்த