பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

115 என்னும் நன்னூல் நூற்பாவில் புலவன் சிலவிடங்களில் தன்னைப் புகழ்ந்து கூறலாம் என்னும் விதியுள்ளது. அதுபோலத் தலைவனும் கல்வி கொடை பொருள் செயல் பற்றியும் முற்றகப்பட்டோனை முற்றுவிடுத்தலும் முதலிய தொழில்களை நிகழ்த்தற்குப் பிரியுங் காலத்திலே தலைவன் தலைவியிடத்தே தன்னைப் புகழ்ந்து கூறுவன். இத்தகைய ஆள்வினைச் சிறப்பை யான் எய்துவலெனத் தன்னைப் புகழவே அது பற்றித் தலைவி பிரிவாற்றுதல் பயனாயிற்று என்பர் நச்சினார்க்கினியர். இதனை, கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி கிழவோன் விழைவயின் உரிய என்ப (கற்பியல் - 40) என்ற நூற்பா இயம்பும். == தலைவி தலைவன் பிரிவால் துன்புறும்பொழுது வற்புறுத்தியே பிரிவன் என்பது தலைவன் கற்பின்கண் ஒதல் முதலிய வினைபற்றிப் பிரியுங்காலத்தே தலையளி செய்து குறிப்பாற் பிரிவுணர்த்திப் பிரிவன். அவ்வாறின்றித் தலைவி துன்புற்ற காலத்தே அவளைப் பல்லாற்றாலும் வற்புறுத்தி ஆற்றியிருக்குமாறு கூறியே பிரிவன் என்க. இக்கருத்தினை, துன்புறு பொழுதிலும் எல்லாம்கிழவன் வன்புறுத் தல்லது சேறல் இல்லை (கற்பியல் - 43) என்னும் நூற்பா உணர்த்தும். தலைவன் செலவழுங்கிப் பின் பிரிவன் என்றல் ஒதல் முதலானவற்றில் தலைவன் பிரியுங் காலத்தே தலைவி தன் பிரிவால் மிகவும் வருந்துவாள் என்று கருதினால் சில காலம் செல்லாதிருப்பன். இதற்குச் செல வழங்குதல் என்று பெயர் உண்டு. தலைவன் கருதிய ஒதல் முதலான பிரிவினை இடையிலே தவிர்ந்திருத்தல் பிரிந்துபோக ஆற்றாமையாலன்று தலைவியை ஆற்றுவித்துப் பிரிதற்குத் தவிர்ந்த தவிர்ச்சியேயாகும். இதனை,