பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 செலவிடை அழுங்கல் செல்லாமை யன்றே வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும் (கற்பியல் - 44) என்னும் நூற்பாவால் உணரலாகும். தலைவன் வினை.வயிற் பிரிந்து வினைமுடித்து மீளுங்கால் இடையிலே எங்கும் தங்காமல் தலைவியை வந்தமைவன் என்பது வினையே ஆடவற்கு உயிராதலின் வினை செயத் தலைவியைப் பிரிந்த தலைமகன் வினையை முற்ற முடித்த பின்னர்தான் தலைவியைக் கருதத் தொடங்குவான். அவன் தலைவியைக் கருதித் திரும்பி வருங்காலத்திலே வழியிடையில் மகிழ்ச்சியாகத் தங்கியிருந்துவிட்டு வருதல் என்பது ஒத்த அன்புடைய ஐந்திணைக் காமத் தலைவனிடம் இல்லையாம். தலைவன் மேற்கொண்ட வினை முடிவுற்றபின் அவன் உள்ளம் ஒன்றையும் அடையாமல் தலைவியையே அடைந்து விட்டது. அவ்வுள்ளம் உற்ற இடத்தை அடைவதற்கு உதவுகின்ற புள் போலச் செல்லும் எழுச்சி வாய்ந்த குதிரையைத் தலைவன் பெற்றிருத்தலால் அதனை ஊர்ந்து இடையே எங்கும் தங்காமல் தலைவியை வந்தடைவான். இக்கருத்தினை, வினை.வயிற் பிரிந்தோன் மீண்டுவருங் கால் இடைச்சுர மருங்கில் தவிர்தல் இல்லை உள்ளம் போல உற்றுழி உதவும் புள்ளியற் கலிமா உடைமை யான (தொல். கற்பியல். 53) என்னும் நூற்பாவால் உணரக்கூடும். ஐந்திணைக் காமத் தலைவர் அடியோரும் வினைவலரும் அல்லாத பெருந்திருவினர் என்பதை மேற்கண்ட நூற்பாவாலும் உணரக்கூடும். இன்னும் ஐந்திணைக் காமத்தலைவர் 1. கிழவி நிலையே வினையிடத் துரையார் வென்றிக் காலத்து விளங்கித் தோன்றும் (தொல், கற்பியல், 45)