பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ஐந்திணைக் காமத் தலைவிக்கு அச்சமும் நானும் மடனும் முதலியன பெண்பாற்கு உரியன என்பர் தொல்காப்பியர். நச்சினார்க்கினியர் அச்சம் என்பதை அன்பு காரணத்தாற் றோன்றிய உட்கு என்றும் நாண் என்பதை காமக்குறிப்பு நிகழ்ந்தவழிப்படுவதோர் உள்ளவொடுக்கம் என்றும் மடன் என்பதை செவிலியர் கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை என்றும் கூறுவர். தலைவன் இயற்கைப்புணர்ச்சியில் தலைவியைக் கண்டு முன்னிலையாக்கல் முதலிய சொற்களைத் தலைவியை நோக்கிக் கூறுவன். அதுபோலத் தலைவியும் தலைவனை முன்னிலைப்படுத்திக்கூறும் கூற்று உண்டோ எனின்? நாணமும் மடமும் பெண்மைக்கே உரிய பண்பாகலான் தலைவி ஐந்திணைக் காமத்தினிடத்தே அவள் தன் வேட்கை குறிப்பானதால் சொல்லுதற்குத்தக்க இடத்தினானாதல் புலப்படுமே யல்லது தலைவன் கூற்றைப் போலத் தலைவி கூற்று புலப்பட நிகழாது என்பர். தலைவன் இயற்கைப் புணர்ச்சி கருதிக் கூறும் சொல்லெதிர் தலைவிதான் வேட்கைக் குறிப்பினளாயினும் அதற்கு உடம்பட்ட நெறியைக் கூறுதல் அருமை யுடைத்தாகலால் புணர்ச்சிக்கு உடம்பாடல்லாத கூறுபாடு டைய சொற்களே தலைவி கூறுவாள். இப்பண்பு க்ைக்கிளை பெருந்தினைத் தலைவியாரிடம் நிகழாததாம். 1. அச்சமும் நாணமும் மடமும் முந்துறத்த நிச்சமும் பெண்பாற் குரிய வென்பா - களவியல் 9 2. காமத்திணையிற் கண்ணின்று வரூஉம் நாணமும் மடமும் பெண்மைய வாதலின் குறிப்பினும் இடத்தினு மல்லது வேட்கை நெறிப்பட வாரா அவள்வயி னான - களவியல் 17 3. சொல்லெதிர் மொழிதல் அருமைத் தாகலின் அல்ல கூற்றுமொழி அவள் வயினான - களவியல் 20