பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 களவில் தோழி கூற்று மேலே தலைவியின் கூற்று குறிப்பினும் இடத்தினுமல்லது நெறிப்பட வாரா என்று கூறினார். அத்தகைய நாணமும் மடமும் நிறைந்த தலைவி சில பொழுதில் தானாகவே கூற்று நிகழ்த்துதலும் உண்டு. எப்பொழுதெனின்? தலைவன் இயற்கைப் புணர்ச்சி புணர்ந்தபொழுது உன்னை இன்ன காலத்தில் வரைந்து கொள்வேன் என்று கூறிப் பிரிந்து சென்றான். சென்றவன் பாங்கியின் கூட்டத்திற்கும் முயல வில்லை.அதனால் தலைவி தன்னொழுக்கத்தைப் பாங்கிக்குத் தெரியாமல் மறைத்தொழுக வேண்டியவளானாள், அப்பொழுது தலைவி அவன் வருந்துணையும் ஆற்றாது வருத்தமுற்ற காலத்திலே தானே கூற்று நிகழ்த்துவாள். தலைவன் வரைந்து கொள்ளாமல் களவொழுக்கத்திலேயே இயங்குங் காலத்துச் செவிலி முதலானவரை எதிர்ப்பட்ட பொழுதும் தலைவி தானே கூற்று நிகழ்த்துவாள். தலைவன் தானே தலைவியிடம் நம் களவொழுக்கத்தை தோழிக்குக் கூறு என்று கூறியவிடத்தும் தலைவி கூற்று நிகழ்த்துவாள். தலைவியின் பெருமை கற்பொழுக்கத்தை மேற்கொண்டபொழுது தலைமகள் பிரிந்த காலத்திலே அப்பிரிவால் தலைவி மிகவும் வருந்தி னாள். அதனால் அவள் உடம்பும் உயிரும் வாட்டமுற்றன. அப்பொழுது கூட அவள், இவைகள் எதற்கு வருகின்றன 1. வரைவிடை வைத்த காலத்து வருந்தினும் வரையா நாளிடை வந்தோன் முட்டினும் உரையெனத் தோழிக்கு ரைத்தற் கண்ணும் தானே கூறும் காலமும் உளவே (களவியல் - 22) 2. உடம்பும் உயிரும் வாடியக் காலும் என்னுற் றனகொல் இவையெனின் அல்லதைக் கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை (பொருளியல் - 8)