பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 என்று கூறுவாளேயொழிய தலைமகன் உள்ள இடத்தை நாடிச் சேர்தல் ஐந்திணைத் தலைவிக்கில்லை. தலைவி தலைவன் உள்ள இடத்திற்குச் சேறலும் அகப்பொருளே என்றல் அத்தகைய பெருமை தங்கிய தலைவிதானும் களவொழுக்கம் நிகழ்ந்த காலத்திலே செய்யத்தகாத அதனைச் செய்திருக்கிறாள். களவிற் கூடிய தலைமகன் தலைவியை வரைந்து கொள்ளாமல் வரைவு நீட்டிக்கின்றான். அப்பொழுது நொதுமலர் தலைவியை வரைந்து கொள்ள விரைந்து முயல்கின்றனர். அப்பொழுது தலைவி தன் கற்பொழுக்கத்தைக் காத்துக் கொள்ளவேண்டியவளா கின்றாள். எல்லாப் பொருளிலும் சிறந்தது உயிராகும். அவ்வுயிரினும் சிறந்தது நாணமாகும். அந்த நாணத்தைக் காட்டிலும் கற்புச் சிறந்ததென்று முன்னுள்ளோர் கூறிய கூற்றினை உறுதியாகக் கொண்ட நெஞ்சமொடு, தலைவி, தலைவன் உள்ள இடத்திற்கே சென்றுவிடுதலும், அங்ங்ன மின்றித் தலைவன் உள்ள இடத்திற்குப் போய்விடுவோம் என்று கூற்று நிகழ்த்தினும் இவையெல்லாம் ஐந்திணை அகப்பொருளாகவே கொள்ளப்படும் என்பர். ஐந்திணைக் காமத்தலைவி சிறந்த நாணத்தை உடையவ ளாதலால் தான் உற்ற காம வேட்கையைத் தலைவன் முன் கூறுதல் இல்லவே இல்லை. ஏனைய கைக்கிளை, பெருந் திணைக் காமத்தலைவியராயின் அவர்தம் வேட்கையைத் தலைவன் முன் கூறுவர். அவர் போல் இவள் கூறாள். 1. உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும் தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு காமக் கிழவன் உள்வழிப் படினும் நாவில் நன்மொழி கிழவி கிளப்பினும் ஆவகை பிறவும் தோன்றுமன் பொருளே m (களவியல் - 22)