பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121 இங்கே தொல்காப்பியர் பெருந்திணைக் காமத் தலை மக்களைப் பிறநீர் மாக்கள்' என்று கூறியதைக் கருதுக! தலைவி தற்புகழ்ச்சி தலைவன் வினைமேற்கொண்டொழுகும் பொழுது, வினை செய்யப் பிரியும் பிரிவிற்குத் தலைவியை இசையச் செய்வதற்காகத் தலைவன் தன்னைத் தலைவி முன் புகழ்ந்து கூறுவான் என்ற செய்தியை மேலே உணர்ந்தோம். அது போலவே தலைவியும் சிலவிடத்துத் தான் தலைவன் முன் தன்னைப் புகழ்ந்து கூறுவாள். அதனைக் கூறுகின்ற நூற்பாவைக் கீழே காண்க. தற்புகழ் கிளவி கிழவிமுன் கிளத்தல் எத்திறத் தானும் கிழத்திக் கில்லை முற்பட வகுத்த இரண்டலங் கடையே (கற்பியல் 39) தலைவியானவள் தலைவன்முன் தன்னைப் புகழ்ந்து கூறும் கூற்றினைக் கூறுதலென்பது எத்தகைய வினைக் கூறுபாட்டிலும் இல்லை. நிச்சயமாக இல்லை. ஆனால், இரந்து கேட்டுக் கொள்ளும்பொழுதும், தன் மேல் குற்றமில்லை என்று கூறி, அதனைத் தெளிய உணர்த்தும் பொழுதும் ஆகிய இரண்டிடங்களில் மட்டும், தன்னைப் புகழ்ந்து கூறுவாள். அவள் என்ன நோக்கத்தோடு புகழ்ந்து கூறுகின்றாள். எனின், மாயப் பொய்மையே கூறிப் பொருளொன்றினையே கருதியொழுகும் பரத்தையர் தம் அன்பற்ற நிலையையும், வாழ்விலும் தாழ்விலும் ஒன்றி யிருந்து தலைவன் மேல் நீங்காத அன்பு கொண்டொழுகும் தன் நிலையையும் தலைவன் கருதியுணருமாறு இரத்தலும் தெளித்தலுமாகிய இரண்டிடத்தில் தலைவி தன்னைப் புகழ்ந்து பேசிக் கொள்ளுகிறாள். 1. தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல் எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லை. பிறநீர் மாக்களின் ஆறிய ஆயிடைப் பெய்ந்நீர் போலும் உணர்விற் றென்ப (களவியல் 28)