பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தலைவியின் அறம் தலைவனது வரம்பிறவாமை களவு நீட்டிக்க விரும்பும் தலைமகன் தலைவி வந்து தன்னைக் கூடுதற்குரிய இடத்தைத் தலைமகளையே தெரிந்தியம்பச் சொல்வான். தலைவன் விரும்பும் இடத்திற் கெல்லாம் தலைவி வாராள். அவளால் வரவும் முடியாது. அதனால், அவள் வந்து கூடுமிடத்தை அவளே அறிந்து கூறுமாறு தலைவன் கூறுவான். ஆனால், தலைவி களவினை. நீட்டிக்க விரும்பவில்லை. தம் ஒழுக்கம் அலராவதன்முன் விரைந்து வரைந்து கொள்ளவே விரும்புகின்றாள். தலைவன் களவினை நீட்டிக்க விரும்பித் தலைவி வந்து தன்னைக் கூடுதற்குரிய இடத்தினைத் தானே அறிந்து கூறுமாறு கேட்கின்றான். களவொழுக்கத்தை நீட்டிக்கத் தலைவிக்கு விருப்பம் இல்லாவிடினும் தலைவன் தன்னைக் கேட்டுக் கொள்ளும்பொழுது என்ன . செய்வதென்று கருதுகின்றாள். நமக்கு அறமாவது தலைவன் கருத்தின்படி நடப்பதே என்று உறுதி செய்து கொண்டு தனக்கு விருப்பமில்லாவிடினும் அவன் விருப்பத்திற் கிணங்கிக் குறியிடம் கூறுகின்றாள். கோவல்ன் கண்ணகியை மறந்து மாதவியினிடத்தே வாழ்ந்து வந்தான். ஏதோ சில நிகழ்ச்சியால் உவர்ப்புற்று அவன் மாதவியினிங்கிக் கண்ணகியை அடைந்து பொரு ளிட்டி வாழ்வதற்காக நாம் இருவரும் மதுரை செல்வோம் என்று கண்ணகியிடம் கூறினான். கண்ணகியும் மறுத் துரைப்பது அறனன்று எனக் கருதி உடன்பட்டுச் சென் றாள். இவற்றால் ஐந்திணைக் காமத்தலைவியின் அறம் விளங்கு கின்றது. இவைபோல் தலைவியின் மாண்புகள் பலவற்றைத் தொல்காப்பியத்தால் உணரக் கூடியன பல உள்ளன. இனி வாயில்களைப் பற்றி ஆராய்வோம். அகத்தினை இலக்கியத்தில் வருபவர் ஐந்திணை இலக்கியத்தில் வருபவரைத் தலைவன், தலைவி, வாயில்கள் என மூன்று பிரிவினராக வகுத்துக் கொள்ளலாம். ஐந்திணைத் தலைவன் தலைவியர் இயல்பைப்