பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 பட்டுள்ள அடிகட்கு இளம்பூரணர் செந்தமிழின் இயல்பு பொருந்தின செந்தமிழ் நிலத்து வழக்கொடு முதனுரல்களிற் சொன்னவற்றைக் கண்டு என்று உரை கூறியுள்ளார். இப்பகுதிக்குச் சிவஞான முனிவர் வேறு உரை கூறுவர். இளம்பூரணர் தமிழ்நாட்டில் செந்தமிழ்நிலம் என்று ஒன்று உள்ளதாகக் கருதுகிறார். தொல் - சொல்லதிகாரத்தே எச்சவியலில் "இயற்சொல் தாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவனித் தம்பொருள் விழாஅடிை இசைக்கும் சொல்லே" (2) என்ற நூற்பாவில் 'செந்தமிழ் நிலத்து வழக்கு என்று கூறப்பட்டுள்ளது. இந்நூற்பா உரையுள், "செந்தமிழ் நிலம் என்பது வையையாற்றின் வடக்கு, மருதயாற்றின் தெற்கு, கருவூரின் கிழக்கு, மருவூரின் மேற்கு" என்று இவற்றுள் அடங்கும் நாடாகும் என்று இளம்பூரணர் குறிக்கின்றார். அடுத்துத் திசைச் சொல்லைக் கூறும்பொழுது தொல்காப்பியர், செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி (எச்ச-4) என்று கூறுகின்றார். மேற்கண்ட நூற்பாவிற்கு இளம்பூரணர் "செந்தமிழ் நாட்டை அடையும் புடையும் கிடந்த பன்னிரு நிலத்தார் தம் குறிப்பினையே இலக்கணமாக வுடைய திசைச்சொற்கள் என்று உரைகூறிச் செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலமாவன (1) பொதுங்கர் நாடு (2) தென்பாண்டி நாடு (3) ஒளி நாடு (4) குட்ட நாடு (5) பன்றி நாடு (6) கற்கா நாடு (7) சீத நாடு (8) பூழிநாடு (9) மலைநாடு (10) அருவா நாடு (11) அருவா வடதலை நாடு (12) குடநாடு என்று அவற்றிற்குப் பெயரும் கூறுகின்றார். இளம்பூரணர் தமிழ்நாட்டுள் ΦΟΕ பகுதியைச் செந்தமிழ் நிலம் என்று பிரித்து, இந்த நாட்டைச் சேர்ந்த பொதுங்கர் நாடு முதலிய பன்னிரண்டும் திசைச்சொல் வழங்கும் நாடு என்று குறிப்பிடுகின்றார். இவ்வாறு கொள்வதற்கு இவர் கூறுவதே சான்றா? அல்லது வேறு சான்று உண்டா என்பது தெரியவில்லை.