பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆனால், சேனாவரையர் முதலிய ஆசிரியர் இளம் பூரணர் சொன்ன செந்தமிழ்நாடு வையையின் வடக்கும், மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும் மருவூரின் வடக்கும் உள்ளநாடு என்பதை ஏற்றுக்கொண்டு, அதனைச் சூழ்ந்த பன்னிரண்டு நாட்டைக் கொடுந்தமிழ் நாடு என்று பெயர் வைத்துக் கூறுகின்றார். நன்னூலாசிரியர் திசைச்சொல்லைக் கூறும்பொழுது தொல்காப்பியரைப் போலக் கூறாமல் செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற் றிரண்டினில் தமிழ்மொழி நிலத்தினும் தங்குறிப் பினவே திசைச்சொல் என்ப என்னும் நூற்பாவால் செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரு நிலத்திலும் பதினெண்மொழி பேசும் நிலத்துள் தமிழ் நீங்கலான சிங்களம் முதலான பதினேழு நிலத்தினும் வழங்கும் மொழிகள் செந்தமிழ் மொழியில் வந்து வழங்கின் இந்த இரண்டையும் திசைச்சொல் என்றே ஆசிரியர் வழங்குவர் என்று கூறுகின்றார். இந் நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர் நீங்கலான எல்லா உரையாசிரியரும் செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலம் என்பதற்குச் "செந்தமிழ் நிலத்தைச் சார்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நிலத்தின் கண்ணும்" என்றே உரைகூறி வருகின்றனர். கொடுந்தமிழ் தொல்காப்பியர் கொடுந்தமிழ் என்ற சொல்லை எங்கும் ஆளவில்லை. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தை இளம்பூரணர் திசைச்சொல் வழங்குமிடமாகக் கூறுகிறாரே யன்றிக் கொடுந்தமிழ் வழங்கும் நிலம் என்று அவர் குறிப்பிடவில்லை. ஆனால் சிலப்பதிகார ஈற்றில் நூற் கட்டுரையைப் பார்த்தால், குமரி வேங்கடம் குணகுட கடலா மண்டினி மருங்கில் தண்டமிழ் வரைப்பில் செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதியின் ஐந்திணை மருங்கின் அறம்பொருள்இன்பம்