பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 மக்கள் தேவர் என இரு சார்க்கும் ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர எழுத்தொடு புணர்ந்தசொல் லகத்தெழு பொருளை இழுக்கா யாப்பின் அகனும் புறனும் அவற்று வழிப்படுஉம் செவ்விசிறந் தோங்கிய பாடலும் எழாலும் பண்ணும் பாணியும் அரங்கு விலக்கே ஆடலென் றனைத்தும் ஒருங்குடன் தரீஇ உடம்படக் கிடந்த வரியும் குரவையும் சேதமும் என்றவை தெரியது வகையால் செந்தமி ழியற்கையின் ஆடிநன் னிழலின் நீடிருங் குன்றம் காட்டு வார்போல் கருத்துவெளிப் படுத்து மணிமே கலைமேல் உரைப்பொருள் முற்றிய சிலப்பதி காரமும் முற்றும் என்னும் அது, "தெற்கே குமரியும் வடக்கே வேங்கடமலையும் கிழக்கே கடலும் மேற்கே கடலும் என்னும் நான்கு எல்லைக்குட்பட்ட தமிழ்நாட்டிலே, செந்தமிழ், கொடுந்தமிழ் என்று கூறும் இரண்டு பகுப்புள், ஐந்திணை அடுத்த அறம் பொருள், இன்பம் என்பவை மக்கள் தேவர் என வழங்கும் இருசாரார்க்கும் பொருந்துமாறு, பொருளை இழுக்காமற் கொண்டொழுகும் யாப்பினாலே, அகத்தினையும் புறத்திணையும் அவற்றின் வழிப்பட்டு நடக்கும் பாடலும் எழாலும் பண்ணும் பாணியும் அரங்கு விலக்கு ஆடல் என்றனைத்தும் ஒருங்கு தழுவி உடம்பட்டுக் கிடந்த வரியும் குரவையும் சேதமும் என்றிவைகளெல்லாம் தெரியுமாறு செந்தமிழியற்கையாலே செய்யப்பட்ட சிலப்பதிகாரம்" என்று கூறுகிறது. அறிஞர் சிலப்பதிகார நூற்கட்டுரையை முடிவுச் சொற்களுடன் முடித்துச் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன். தமிழ்நாட்டிலே செந்தமிழ் கொடுந்தமிழ் என்ற இரண்டு பகுப்பில் இச்சிலப்பதிகாரம் செந்தமிழ் இயற்கை யால் செய்யப்பட்டது என்பது முடிபாகின்றது. அங்ங்ன