பக்கம்:தொல்காப்பியக் கட்டுரைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மாயின் மேலே குறிப்பிட்ட செந்தமிழ் கொடுந்தமிழ் என்பன நாடா? மொழியா? கருதுக. ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஒதாதார் செந்தமிழ் சேராத வர் என்று ஐந்திணை ஐம்பதின் பாயிரம் செந்தமிழைக் கூறுகின்றது. சான்றவர் தேர்ந்து தம்முடைத் தெளிவால், சயமுறக் கோத்தசெந் தமிழை (திருவாலவா 15-6) இப்பாட்டில் சான்றவர் என்றது சங்கப் பலகையில் வீற்றிருந்த புலவரை. அவரியற்றிய பாடலைச் செந்தமிழ் என்று மேற்பாட்டு குறிக்கின்றது. தொல்காப்பியரும் எண்வகை வனப்பில் அழகு என்னும் வனப்பு செய்யுள் மொழியால் வரும் என்றும் புலன்' என்னும் வனப்பு சேரி மொழியால் வரும் என்றும் கூறுகின்றார். தமிழில் நல்ல நடையைச் செந்தமிழ் நடையென்றும் இழிந்த நடையைக் கொச்சை நடை என்றும் கொடுந்தமிழ் நடையென்றும் கூறும் வழக்கம் உண்டு. இக்காரணங்களால் தமிழ்நாட்டில் செந்தமிழ் நாடென்றும், கொடுந்தமிழ் நாடென்றும் இரண்டு பிரிவான நாடு ஒன்று இல்லை என்பதும் ஆனால் செந்தமிழ் மொழி கொடுந்தமிழ் மொழி என்று இரண்டு QᏗ ❍ ᎼᏂ ᏞIIᎢ ❍Ꭲ மொழிநடை தமிழில் உண்டு என்பதும் புலனாகின்றன. செந்தமிழ் மொழியை இலக்கண வரம்புடன் கூடிய புலவர் மொழி என்றே கூறலாம். கொடுந்தமிழ் மொழி என்பது இலக்கண வரம்பு கருதாத கல்வியறிவற்ற மக்களின் பேச்சு வழக்கு மொழியாகும். இதனைக் கொச்சை மொழி என்றும் கூறுவர். எனவே தமிழ்நாடு என்றாலும், "செந்தமிழ் நாடென்றபோதினிலே இன்பத்தேன்வந்து Լյո ավ:5/ காதினிலே" என்று பாரதியார் வழங்குவது போலச் செந்தமிழ் நாடு என்றாலும் அவ்விரண்டு சொற்களும் தமிழ்நாட்டையே குறிக்கும் என்க. அங்ங்னமாயின் தொல்காப்பியர் செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிருநிலம் என்றது எவற்றை எனின்? இந்நூற்பா திசைச்சொல்லைக் குறிக்க வந்ததாகும். தமிழ்நாட்டைச்